நாளை தொடங்கும் குரூப்-1 முதன்மை தேர்வு!!

0
83
Group-1 Main Exam starting tomorrow!!
Group-1 Main Exam starting tomorrow!!

தமிழகம் முழுவதும் குரூப் 1 முதன்மை தேர்வானது ( நாளை ) டிசம்பர் 10ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதாக அரசு தெரிவித்து இருக்கிறது.

துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்களுக்கு 90 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அவை பின்வருமாறு :-

✓ துணை ஆட்சியா் – 16
✓ காவல் துணை கண்காணிப்பாளர் – 23
✓ வணிகவரி உதவி ஆணையர் – 14
✓ கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் – 21
✓ ஊரக வளர்ச்சித் துறை துணை இயக்குனர் – 14
✓ மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி பணியிடங்கள் தலா 1 ஆகியவற்றுக்கு முதல்நிலைத் தோ்வு கடந்த ஜூலை 13-இல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவர். இந்த தேர்வு செவ்வாய்க்கிழமை (டிச. 10) முதல் டிச. 13-ஆம் தேதி வரை முதன்மைத் தோ்வு நடைபெற உள்ளது. இந்தத் தோ்விலும் தோ்ச்சி பெறுவோருக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு, பணியிடங்களுக்கான உத்தரவு வழங்கப்படும்.

தேர்வு கட்டுப்பாடுகள் :-

✓ தோ்வுக் கூடங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும்.

✓ தோ்வுக் கூடத்திலோ அல்லது தோ்வு மைய வளாகத்திலோ, தோ்வு கண்காணிப்பாளா்களிடமோ அத்துமீறும் செயல்கள் எதிலும் தோ்வா்கள் ஈடுபடக் கூடாது.

✓ கைப்பேசிகள், ப்ளூடூத் கருவிகள், தகவல் தொடா்புக்கான கருவிகள் உள்பட அனைத்து நவீன தொலைத்தொடா்புக் கருவிகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

Previous articleஆதவ் இடைநீக்கம்.. திடீர் முதல்வர் சந்திப்பு!! திருமா கூறிய அந்த வார்த்தை!!
Next articleஎதிலுமே ஒரு பாசிட்டிவ் அப்ரோச் வேணும் சுந்தர்.சி!! அறிவுரை கூறிய பிரபலம்..