தமிழ் சினிமா துறையில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா அவர்கள் தனக்கு என்னுடைய பட்டம் வேண்டாம் என்றும் இதனால் பல பிரச்சினைகளை தான் சந்திப்பதாகவும் வைத்திருக்கிறார்.
கடந்த 5 வருடங்களாகவே தான் நடித்த படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை பயன்படுத்த வேண்டாம் என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.மேலும், டைட்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் என வருவதை காணும் பொழுது தனக்கு மிகுந்த பயமாக இருப்பதாகவும் இவர் கூறியிருப்பது ரசிகர்களிடையே பல விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நயன்தாரா அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்துள்ள நயன்தாரா, என்னுடைய அடுத்த மிகப்பெரிய சர்ச்சையே அதுதான். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தால் நான் பல பின்னடைவுகளை சந்தித்து இருக்கிறேன். கடந்த நான்கு, ஐந்து வருடமாக டைட்டில் கார்டு போட வேண்டாம் என்று தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் பலமுறை சொல்லி இருக்கிறேன். அந்த பட்டத்தை பார்க்கும் போதே எனக்கு பயமாக இருந்தது. பட்டத்தால் எதுவும் நடந்து விடாது என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால் எனது ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு, மரியாதை காரணமாக என்னை அப்படி அழைத்து வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.
மேலும், நான் சிறந்த டான்ஸர் என்று எப்போதும் சொல்லிக் கொண்டது இல்லை ஆனால், இந்த இடத்தில் இருக்கிறேன். இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். அதற்காக ரசிகர்கள் என் மீது அன்பு இருப்பதால் என்னை, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இது ஒவ்வொரு படத்திலும் டைட்டிலில் வரும் போது எனக்கே என்னடா என்று தான் இருந்தது. ஆனால் வெற்றிகரமான ஒரு பெண்ணை பார்க்கும்போது யாருக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை. ஆனால் ஒரு பிரச்சனை இருக்கிறது என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரிகிறது என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.