ஜம்மு கஷ்மீரில் தீவரவாதிகளின் தலைவன் சுட்டு கொல்லபட்டது!!

0
87
Terrorist leader shot dead in Jammu and Kashmir!!
Terrorist leader shot dead in Jammu and Kashmir!!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கி இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கம் செய்தது இருந்து அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் ஆட்டம் காட்டும் பயங்கரவாதிகளுக்கு அவ்வப்போது பதில் அடி கொடுக்கப்படுகிறது. குல்காம் மாவட்டம் பெஹிபாக் ஏரியாவில் உள்ள காடர் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் காஷ்மீர் போலீசாருடன் காடர் பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில்  ஈடுப்பட்டனர்.

அப்போது வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததது. கண்முடி தனமாக துப்பாக்கியால் சுட்டனர் பயங்கரவாதிகளுக்கு நம் வீரர்கள் தகுந்த பதில் அளிக்கப்பட்டனர். கடைசியில் ஐந்து பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் அதே இடத்தில் சுட்டு கொல்லப்பட்டனர். இரண்டு ராணுவ வீரர்களும் காயமடைந்தனர். என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஐந்து பயங்கரவாதிகள் ஃபரூக் அகமது பட், இர்பான் லோன், ஆதில் உசேன், முஸ்தக் இடூ), யாசிர் ஜாவத்என்பது தெரிந்தது.

இதில் ஃபரூக் அகமது பட்  ஜம்மு காஷ்மீரில் மிக நீண்ட காலம் ஆட்டம் காட்டிய ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தளபதி என்பது தெரியவந்துள்ளது. 2015-ம் ஆண்டு இந்த  இயக்கத்தில் சேர்ந்த காஷ்மீர் மக்களை தீவிரவாதிகளாக மாற்றி தங்கள் அமைப்பில் சேர வைத்தார். இந்த இயக்கத்தில்  தீவிரமாக செயல்பட்டு தளபதியாக உயர்ந்தார். அவர்  பல முக்கிய தாக்குதல்களுக்கு காரணமாக இருந்ததால் a+ பயங்கரவாதி பட்டியலில் இருந்தார். நான்கு படித்த வசதியான குடும்பத்தைச் சார்ந்த ஃபரூக் அகமது பட் தனது குடும்பத்தை எதிர்த்தே பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

Previous articleஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக  கூட்டணி!! விஜய் கொடுத்த கிரீன் சிக்கினால்!!
Next articleதள்ளுமுள்ளு முடிந்தும் தொடர்ந்த பாஜக,காங்கிரஸ் போராட்டம்!!