cricket: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 வது போட்டியில் தற்போது விளையாட வில்லை. ஆனால் நான் ஓய்வு பெற போவதில்லை என கூறியுள்ளார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. மேலும் இந்த போட்டியில் ஒரு வேலை இந்திய அணி தோல்வியை தழுவினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்து விடும். அதனால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது 5வது போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வென்றது. இதனால் கேப்டன் ரோஹித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் 5 வது போட்டியில் இருந்து விலகினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் நான் இப்போது ஓய்வு பெற வேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய வேண்டும். நான் இப்போது சரியான பார்மில் இல்லை. அதனால் மற்ற வீரர் விளையாட நான் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளேன். இன்னும் அடுத்த ஐந்து மாதங்களில் என்ன வேணாலும் நடக்கலாம்.
இப்போதைக்கு நான் எனது பார்ம் மீது கவனம் செலுத்த வேண்டும். அடுத்த 5 மாதங்களில் ஓய்வு எப்போது என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் 5 மாதங்கள் கழித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்க உள்ளது அதை வைத்து தான் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார் அதற்கு பின் அவர் ஓய்வை அறிவிப்பார் என்று பேசப்பட்டு வருகிறது.