சருமத்தில் உள்ள துளைகள் நாளடைவில் சிறு சிறு பள்ளம் போன்று உருவாகி முக அழகையே கெடுத்துவிடும்.இந்த துளைகளை சரிசெய்ய இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.
தீர்வு 01:
*முல்தானி மெட்டி – இரண்டு ஸ்பூன்
*பன்னீர் வாட்டர் – ஒரு ஸ்பூன்
*எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
முல்தானி மெட்டியில் பன்னீர் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் பக்குவத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்தில் சருமத் துளிகள் அதிகம் காணப்படும் இடத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு உலரவிடுங்கள்.
அதன் பிறகு குளிர்ந்த நீரை முகத்தை கழுவுங்கள்.இவ்வாறு செய்தால் ஓபன் போர்ஸ் குறைந்து முகம் அழகான தோற்றத்தை பெறும்.
சருமத் துளைகளில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்கும் ஆற்றல் முல்தானி மெட்டிக்கு உண்டு.முல்தானி மெட்டியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள ஓபன் போர்ஸ் தானாக மூடிவிடும்.
தீர்வு 02:
*முட்டை வெள்ளைக்கரு – ஒன்று
*கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்
*எலுமிச்சை ஜூஸ் – ஒரு ஸ்பூன்
ஒரு முட்டையை உடைத்து அதன் வெள்ளைக் கருவை கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.அடுத்து அதில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்துவிடவும்.
அதன் பிறகு எலுமிச்சை சாறை பிழிந்து நுரை வரும் அளவிற்கு கலந்துவிட்டு முகத்திற்கு அப்ளை செய்யவும்.கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள ஓபன் போர்ஸ் மூடிவிடும்.
தீர்வு 03:
*பப்பாளி பழம் – ஒரு கீற்று
*ரோஸ் வாட்டர் – ஒரு ஸ்பூன்
பப்பாளி பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்கவும்.
பிறகு அதில் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்து கொள்ளவும்.இந்த ரெமிடியை தினமும் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள துளைகள் மூடிவிடும்.
தீர்வு 04:
*சந்தனப் பொடி – ஒரு ஸ்பூன்
*கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
*தயிர் – ஒரு ஸ்பூன்
கிண்ணம் ஒன்றில் ஒரு ஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து அதில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இதை முகம் முழுவதும் அப்ளை செய்து நன்கு காயவிடவும்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமத் துளைகள் இறுகிவிடும்.