பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் மீண்டும் பரபரப்பு!!

0
92
Pollachi Balloon Festival is again sensational!!
Pollachi Balloon Festival is again sensational!!

தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்திற்காக இந்த வருட பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. சென்ற வாரம் சென்னையில் கோலகலாக நடந்து முடிந்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 9 வருடங்களாக பொங்கல் பண்டிகையையொட்டி பலூன் திருவிழா நடந்து வருகின்றது. தற்சமயம், பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி, பொள்ளாச்சி- கோவை சாலையிலுள்ள ஆட்சிப்பட்டி மைதானத்தில் பத்தாவது ஆண்டாக ஜனவரி 14ஆம் தேதி, 2025 பலூன் திருவிழா தொடங்கியுள்ளது.

தமிழக அரசு நிறுவனத்துடன் இணைந்து இவ்விழாவை கொண்டாடியுள்ளது. இப்பலுன்கள் வியட்நாம், பிரேசில் போன்ற எட்டு நாடுகளிலிருந்து பலூன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனுள் யானை, புலி, கரடி போன்ற வடிவப் பலூன்களும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், மக்களால் பொள்ளாச்சியின் அழகை ரசிக்க முடியும். எனினும், இதில் பறப்பதற்கு 2000 ரூபாய் வரை டிக்கெட் வசூல் செய்வதால் பலரும் பலூனை வேடிக்கை பார்த்தவாறும், பலூன் முன் நின்று போட்டோ எடுத்துச் சென்றவாறும் உள்ளனர்.

ஜனவரி 14 அன்று விடப்பட்ட யானை வடிவ பலூனில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆணும், இரண்டு பெண் பைலட்டுகளும் மேலும் இரு சிறுமிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆட்சி பட்டி மைதானத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் இப்பலூனை தரையிறக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், காற்றின் வேகத்தால் பலூன் வானில் சுற்றிக் கொண்டே இருந்துள்ளது.

திசைமாறிய அந்த பலூன் முப்பது கிமீ தூரம் தாண்டி கேரளாவில் கன்னிமாரி முல்லந்தட்டு பகுதியில் உள்ள வயலில் தரையிறங்கியுள்ளது. வயலில் பலூன் தரையிறங்கியதையொட்டி அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பலூனில் பயணம் செய்தவர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து தற்போதும் இரண்டாவது முறையாக மூன்று நபர்களுடன் சென்ற பலூன் கேரளா மாவட்டம், பாலக்காடு வயல்வெளிக்குள் தரை இறங்கியுள்ளது. இன்று காலை ஏழரை மணிக்கு பத்தான்சேரி பகுதியில் தரையிறங்கியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தரையெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Previous articleபுதிய முறையில் கதை கூறிய இயக்குனர்!! ஓவியங்களை கண்டு ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர்!!
Next articleஅமைச்சர் மீது சேறு வீசியவர்களின் நிலை குறித்து யோசித்தீர்களா!! பாமக தலைவர் அன்புமணி!!