DMK TVK: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை எதிர்த்து விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒருபோல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். பெரும்பாலானோர் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்த நிலையில் பெயர் கூட இடம்பெறவில்லை. மேலும் எட்டாவது முறையாக இவர் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்வது மேலிடத்திற்கு பறைசாற்றும் விதமாக இருந்தாலும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் இது திருப்திகரமான தாக இல்லை.
பல வரவேற்கத்தக்க பெண்களுக்கான மகத்துவமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்திற்கு என்று தனிப்பெரும்பான்மையுடன் எதுவும் இல்லை. இது குறித்து ஆளும் கட்சி என தொடங்கி மாற்று கட்சியினர் வரை அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசு தமிழகத்திற்கு மீண்டும் மிகப்பெரிய துரோகத்தை அளித்துள்ளது என்று குறிப்பிட்டு பேசினார்.
அதேபோல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் யும் இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை குறிப்பாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மிகத் தொன்மையான இரும்பு நாகரீகம் என்ற பெருமை ஒட்டுமொத்த இந்தியாவையே சேரும். அந்த வகையில் அதற்குரிய ஆராய்ச்சியை மேற்கொள்ள எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை.
அதேபோல் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டங்கள் இதில் இருப்பதால் வேதனைக்குரிய அறிவிப்பாக அது கருதப்படுகிறது. மேலும் வருடம் தோறும் நிதிநிலை தாக்கல் செய்யும் பொழுது எந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதோ அது சார்ந்த அறிவிப்புகள் அதிகமாக வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசு பாரபட்சதோடு நடப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் பட்ஜெட் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னதாகவே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தனது எதிரி பாஜக என்று கூறியதில் இந்த பட்ஜெட் தாக்கலில் ஒட்டுமொத்த ஆளும் கட்சி மற்றும் மாற்ற கட்சியினர் என அனைவரும் இந்த அறிவிப்புக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.