மார்பு மற்றும் முலை வீக்கம் குறைய.. தேங்காய் எண்ணெயை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

BREAST & NIPPLE PAIN: பாலூட்டும் தாய்மார்களுக்கு சில நேரம் மார்பு மற்றும் முலைக்காம்பு பகுதியில் தாங்கிக் கொள்ள முடியாத வலி ஏற்படும்.இந்த பாதிப்பில் இருந்து மீள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

உங்கள் மார்பு பகுதி சில நேரம் வீங்கி வலியை உணடாக்கும்.இந்த மார்பு தசை வலி முழுமையாக குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றை செய்யுங்கள்.இதனால் சில மணி நேரத்தில் மார்பு தசை வீக்கத்திற்கு நிவாரணம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.மார்பு வலியை பொறுத்து தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.சுத்தமான தேங்காய் எண்ணையாக இருக்க வேண்டும்.

**இந்த தேங்காய் எண்ணயை வீங்கிய மார்பு மற்றும் முலை மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் வீக்கம் முழுமையாக வத்தும்.

மார்பு மற்றும் முலை வீக்கத்தை குறைக்கும் மற்றொரு வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)மரிக்கொழுந்து – சிறிதளவு
2)பன்னீர் ரோஜா இதழ் – இரண்டு தேக்கரண்டி
3)எருமை தயிர் – ஒரு தேக்கரண்டி
4)கிரேம்பு – நான்கு
5)அன்னாசி பூ – இரண்டு

செய்முறை விளக்கம்:-

**முதலில் சிறிதளவு மரிக்கொழுந்து எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

**பிறகு இதை உரலில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து இரண்டு தேக்கரண்டி பன்னீர் ரோஜா இதழை உரலில் போட்டு தண்ணீர் ஊற்றி இதையும் ஜூஸ் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் நன்கு கிராம்பு(இலவங்கம்) மற்றும் இரண்டு அன்னாசி பூவை உரலில் போட்டு பவுடர் பதத்திற்கு இடித்துக் கொள்ள வேண்டும்.

**இப்பொழுது மரிக்கொழுந்து சாறு எடுத்து வைத்துள்ள கிண்ணத்தில் அரைத்த பன்னீர் ரோஜா இதழ் சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

**அடுத்து இடித்து வைத்துள்ள கிராம்பு மற்றும் இலவங்கப் பொடியை அதில் போட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

**பிறகு இரண்டு தேக்கரண்டி அளவு எருமை தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இதை வீங்கிய மார்பகங்கள் மீது அப்ளை செய்து வந்தால் சீக்கிரம் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)நாட்டு சர்க்கரை – இரண்டு தேக்கரண்டி
3)ரோஜா இதழ் – இரண்டு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு அதில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

**பிறகு இரண்டு தேக்கரண்டி ரோஜா இதழ் சேர்த்து ஒரு கிளாஸ் அளவு வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

**இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் மார்பு வீக்கம் முழுமையாக குணமாகும்.