தற்பொழுது இந்தியாவில் அதிகரித்து வரும் நோய் பாதிப்புகளில் முதல் இடத்தில் இருப்பது இதய நோய்.பெரியவர்,சிறியவர் என்று பாரபட்சம் இன்றி அனைவருக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது.குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாரடைப்பு உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதயம் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகளை பொறுத்தவரை பல வகைகள் இருக்கிறது.மார்பு வலி,மாரடைப்பு,மார்பு பகுதியில் ஊசி குத்தல் உணர்வு,இருதய அடைப்பு போன்றவை இதய நோயை சேர்ந்தவை ஆகும்.
இதில் இருதய நோய் பாதிப்பு இரத்த நாடிகள் சேதமடைவதால் ஏற்படுகிறது.வயதாகும் போது இருதய பாதிப்பின் ஆபத்து மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கும்.
இருதய நோய்க்கான பொதுவான அறிகுறிகள்:
1)நெஞ்சு படபடப்பு
2)தலைவலி
3)உடல் சோர்வு
4)மூச்சுத் திணறல்
5)மயக்கம்
6)மார்பு வலி
7)தலைச்சுற்றல்
8)ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
இருதய நோய்க்கான காரணங்கள்:
1)உயர் இரத்த அழுத்தம்
2)அதிகப்படியான கொழுப்பு
3)நீரிழிவு நோய்
4)உடல் பருமன்
5)ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்
6)பரம்பரைத் தன்மை
7)புகைப்பழக்கம்
இருதய நோய் பாதிப்பை தடுக்க சீரான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.பழங்கள்,காய்கறிகள்,நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்,கீரைகள்,முழு தானிய உணவுகள் சாப்பிட வேண்டும்.கொழுப்பை குறைக்கும் உணவுகளை அதிகளவு சாப்பிட வேண்டும்.
இருதய நோய் பாதிப்பு இருபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
*ஆரோக்கியம் இல்லாத கொழுப்பு உணவுகள்
*வறுத்த மற்றும் பொரித்த உணவுகள்
*பதப்படுத்தப்பட்ட உணவுகள்
*சர்க்கரை உணவுகள்
*துரித உணவுகள்
இருதய நோயாளிகள் மது அருந்தலாமா?
ஆண்கள் மட்டுமின்றி பெண்களிடையே மது பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது.இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.மது பழத்தை கைவிட முடியாதவர்கள் குறைவான அளவு மது எடுத்துக் கொள்ளலாம்.
மது பழக்கத்தை முழுமையாக தவிர்க்க வேண்டியவர்கள்:
1)கர்ப்பிணி பெண்கள்
2)தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்
3)கல்லீரல் மற்றும் நுரையீரல் பாதிப்பு இருப்பவர்கள்
4)கருத்தரிக்கும் முடிவில் இருக்கும் பெண்கள் மது அருந்தக் கூடாது