Cooker சாதம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? குக்கரில் சமைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!!

0
6

இன்றைய காலத்தில் சமையல் பொருட்கள் அனைத்தும் நவீனமாகிவிட்டது.விறகு அடுப்பில் இருந்து கேஸ் அடுப்பிற்கு மாறி தற்பொழுது கரண்ட் அடுப்பில் சமைக்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது.அதேபோல் சமையல் பாத்திரங்களிலும் பெரிய அளவில் மாற்றங்கள் வந்துவிட்டது.

மண் சட்டி,இரும்பு பாத்திரங்களின் புழக்கம் குறைந்து தற்பொழுது நான் ஸ்டிக்,குக்கர் போன்ற சமையல் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.இதில் குக்கரில் சமைப்பது எளிதாக இருப்பதோடு நேரமும் மிச்சமாவதால் பெரும்பாலான இல்லத்தரசிகள் இதையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

நம் தென் இந்தியர்கள் தான் குக்கரை அதிகம் பயன்படுத்துகின்றனர்.அரிசி சாதம்,பிரியாணி,அசைவ உணவுகளை சமைக்க குக்கர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.குக்கரில் இரண்டு,மூன்று விசில் விட்டால் 10 நிமிடத்தில் உணவு ரெடி என்பதால் பலரும் குக்கர் சமையலயே விரும்புகின்றனர்.

இப்படி நம் சமையலை எளிமையானதாக மாற்றும் குக்கரை பயன்படுத்தினால் நல்லதைவிட உடலுக்கு பக்கவிளைவுகள் தான் அதிகளவு ஏற்படும்.முன்பெல்லாம் அரிசி சாதத்தை வடித்து சாப்பிட்டு வந்த நாம் பின்னர் குக்கரில் அரிசியை போட்டு கஞ்சி வெளியேறாத சாதம் செய்து சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றினோம்.

தற்பொழுது சாதம் வடிக்கும் குக்கர் இருப்பினும் இந்த குக்கர் சாதத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் அவை நமக்கு உடல் அளவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

குக்கரில் சமைக்கும் சாதத்தில் குறைவான அளவே சத்துக்கள் இருக்கின்றன.குக்கர் சாதம் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும்.குக்கர் சத்தத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.குக்கர் சாதம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.எனவே தினமும் குக்கர் சாதம் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு வாரம் இரண்டு அல்லது மூன்றுமுறை வடித்த சாதம் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

Previous articleடியோடரண்ட் பயன்படுத்துபவர்கள் இந்த தவறை மட்டும் தயவு செய்து செய்யாதீங்க!!
Next articleபாதாம் பருப்பு Vs ஊறவைத்த பாதாம் பருப்பு.. உண்மையில் உடலுக்கு எது நல்லது தெரியுமா?