ESA எனப்படும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆனது விண்வெளிக்கு செல்லக்கூடிய மனிதர்கள் எந்த வகையில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் அவர்களின் உடைய உடல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்வது குறித்தும் ஆராய்ச்சி செய்ய Vivaldi III என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.
இந்த ஆய்விற்கு விருப்பமுள்ளவர்களை 10 நாட்களுக்கு நீர் மடிப்பு படுக்கையில் படுக்க வைத்திருந்து அவர்களினுடைய உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதற்காக இந்த ஆய்வில் பங்கு பெறக்கூடிய தன்னார்வலர்களுக்கு 4.7 லட்சம் ரூபாய் அதாவது 50,000 யூரோக்கள் சம்பளமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வில் 10 நபர்கள் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் அவர்களை நீர் நிறைந்த தொட்டியில் நீர் உள்ளே புகாத அளவிற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு ஆடையுடன் நீர் தொட்டியில் தொங்கும் நிலையில் அதாவது விண்வெளியில் ஜீரோ கிராவிட்டி நிலையில் விண்வெளி வீரர்கள் எவ்வாறு இருப்பார்களோ அதே போன்று இந்த நீர் தொட்டிக்குள்ளே இருப்பது போன்று வைத்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் அவர்களுடைய உணவு மற்றும் பிற தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர்களுடைய வீட்டிற்கு செல்போன் மூலம் அழைத்து பேசுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு 10 நாட்கள் வைத்திருக்கக் கூடிய நபர்களை அடுத்த 5 நாட்களுக்கு ஆய்வில் உட்படுத்தி அவர்களுடைய உடலில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றங்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் விண்வெளியில் இருக்கக்கூடியவர்களுக்கு ஏற்படும் உடல் மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ற வகையில் அறிவியல் விஞ்ஞானத்தை மாற்றி அமைக்க முடியும் என தெரிவித்திருக்கின்றனர்.
ஐந்து நாட்கள் மட்டும் இல்லாது அதனை தொடர்ந்து வரும் அடுத்த பத்து நாட்களுக்கும் ஆய்விற்காக அந்த நபர்கள் வந்து செல்ல வேண்டும் என்றும் இது குறித்து ESA நிறுவனத்தின் மனித ஆராய்ச்சி குழு தலைவர் Ann-Kathrin Vlacil அவர்கள் விளக்கமாகவும் விரிவாகவும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக விண்வெளியில் பாதிக்கப்படக்கூடிய விண்வெளி வீரர்களின் உடல் மாற்றங்களை சரி செய்வதற்கான தீர்வாக இது அமையும் என்றும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.