தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியதுதான் எடப்பாடி பழனிச்சாமி செய்த விஷயங்களில் ஹைலைட். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ’அதிமுக இனிமேல் ஒற்றை தலைமையாக செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் பழனிச்சாமி சொன்னார். ஆனால், ஒரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. எனவே, பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்’ என எச்சரிக்கை செய்தார்.
அதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து சென்னை வந்த பழனிச்சாமியிடம் ‘பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘பிரிந்தது பிரிந்ததுதான். சேர வாய்ப்பே இல்லை. கட்சியை இரண்டாக உடைத்து துரோகம் செய்தவர்களை மீண்டும் சேர்த்து கொள்ள மாட்டேம். அந்த முடிவில் மாற்றமே இல்லை’ என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஓபிஎஸ் ‘நான் அதிமுகவில் இணைகிறேன் என சொல்லவே இல்லை. பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என சொன்னேன். ஆனால், அதிமுக எந்த காலத்திலும் வெற்றி பெறக்கூடாது என்பதுபோல்தான் பழனிச்சாமியின் நடவடிக்கை இருக்கிறது’ என நக்கலடித்திருக்கிறார். பிரிந்து கிடக்கும் என சக்தி என ஓபிஎஸ் சொல்வது சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரைத்தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
அதாவது எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் தான் என எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்த்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பதுதான் ஒ.பன்னீர் செல்வத்தின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், பழனிச்சாமிக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. சசிகலா, டிடிவி உள்ளே வந்தால் மீண்டும் தன்னை டம்மி ஆக்கிவிடுவார்கள் என்பதால் தனது தலைமையில் மட்டுமே இனிமேல் அதிமுக செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.