தற்பொழுது தாங்க முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதக்கி வருகிறது.பகல் நேரத்தில் வெளியில் செல்லவே முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.கடுமையான வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து மயக்கம்,தலைவலி,உடல் சோர்வு போன்ற பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
பெரும்பாலானோர் இந்த கோடை வெயிலை சமாளிக்க ஐஸ்க்ரீம்,சர்பத்,கூல்ரிங்ஸ்,ஐஸ் வாட்டர் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுகின்றனர்.இதில் பெரும்பாலானோர் வீடுகளில் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுவதால் ஜூஸ்,வாட்டர் போன்றவற்றை குளிரவைத்து பருகுகின்றனர்.
ஆனால் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தப்படும் எந்தஒரு பொருளும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.இதற்கு மாற்று மண் பானையில் தண்ணீர் ஊற்றி பயன்படுத்தலாம்.மண் பாத்திரங்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்க கூடியதாக உள்ளது.
மண் பானையில் தண்ணீர் ஊற்றி குடித்தால் உடலுக்கு தேவையான இயற்கையான குளிர்ச்சி கிடைக்கும்.உடல் சூடு தணிய மண் பானை தண்ணீர் குடிக்கலாம்.மண் பானை நீர் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
மண் பானை தண்ணீர் சுவையாக இருப்பதோடு சுத்தமானதாக இருக்கும்.கோடையில் நீரேற்றத்துடன் இருக்க மண் பானை நீர் பருகலாம்.மண் பானை நீர் அருந்தினால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.மண் பானை நீர் குடித்தால் தொண்டை வறட்சி ஏற்படாமல் இருக்கும்.ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் மண் பானை நீர் பருகலாம்.
தொண்டைப்புண் பிரச்சனை இருப்பவர்கள் மண் பானை நீர் அருந்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும்.மண் பானை நீர் உடலில் வெப்பம் ஊடுருவாமல் பாதுகாக்கிறது.தினமும் 8 கிளாஸ் மண் பானை நீர் குடித்தால் வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.
மண் பானை நீர் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.மண் பானையில் தண்ணீர் ஊற்றி குடித்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.மண் பானை நீரை குடித்து வந்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.