சம்மரில் சீசனில் உடல் நல பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும்.கோடை வெயில் அதிகரிப்பதன் காரணமாக உடலில் பல நோய்கள் உண்டாகிறது.சுட்டெரிக்கும் வெயிலால் தலைவலி,உடல் சோர்வு,நீரிழப்பு,மயக்கம் போன்ற பாதிப்புகளால் அவதியடைபவர்கள் ஏராளம்.
குறிப்பாக வெயில் காலத்தில் தலைவலி பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.நீர்ச்சத்து குறைபாடு,மன அழுத்தம்,உடல் சோர்வு,தலைசூடு போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.நீரிழப்பால் ஏற்படும் தலைவலியை குணப்படுத்த உடலுக்கு தேவையான திரவத்தை பருக வேண்டும்.
மற்ற பருவ காலங்களைவிட வெயில் காலத்தில் தண்ணீர் தேவை அதிகமாகவே உள்ளது.அதிக வெயிலால் உடலில் இருந்து வியர்வை எளிதில் வெளியேறி நீரிழப்பு அதாவது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
நீரிழப்பால் உண்டாகும் தலைவலியை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.அதிகளவு சிறுநீர் கழித்தல்,உதடு மற்றும் நாக்கு வறண்டு போதல்,உடல் சோர்வு போன்றவை நீரிழப்பால் ஏற்படும் தலைவலியாகும்.
அதேபோல் மன அழுத்தத்தால் கடுமையான தலைவலி பாதிப்பை சந்திக்கக் கூடும்.தூக்கமின்மை,நீரிழப்பு,உடல் சோர்வு,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.இதன் காரணமாக தலைவலி பாதிப்பு ஏற்படும்.மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியை குணப்படுத்த தியானம்,யோகா போன்றவற்றை செய்யலாம்.
அதேபோல் கோடை காலத்தில் உடலில் பித்தம்,கபம்,வாதம் போன்றவை அதிகரிக்கிறது.இதன் காரணமாக தலைவலி பாதிப்பு ஏற்படலாம்.கோடை கால தலைவலியை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம்.
1)உடலில் நீரேற்றத்தை அதிகரிக்க இளநீர் குடிக்கலாம்.இளநீர் குடித்தால் உடலில் வெப்பம் தணியும்.
2)ரோஜா இதழை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறவிட்டு குடித்தால் உடலில் பித்தம் குறையும்.
3)கொத்தமல்லி விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தலைவலி குணமாகும்.
4)புதினாவின் டீ போட்டு குடித்தால் தலைவலி பாதிப்பு நீங்கும்.சோம்பு பானத்தை பருகினால் தலைவலி நீங்கும்.
5)திரிபலா பொடியில் டீ செய்து குடித்தால் தலைவலி பாதிப்பு குணமாகும்.திரிபலா பொடியை சாப்பிட்டால் உடல் சூடு,தலைவலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.