மாநிலங்களில் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைகளுக்குள் செல்ல இனி கட்டாயம் ஈ பாஸ் தேவை இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து, இது குறித்தான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது குறித்தான மத்திய அரசின் உத்தரவுகள், அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலைக்கருத்தில் கொண்டு மாநிலங்கள் முடிவெடுக்கவும் அதிகாரமளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுமுடக்க நீட்டிப்பு வழிகாட்டுதல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கைகள் பின்வருமாறு,
1. இரவு நேர ஊரடங்கு ரத்து
2. ஆக.31 வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம்
3. யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி
4. பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை மூடல்
5. சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும்.
6. மெட்ரோ ரயில்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்களுக்கு செயல்பட தடை
7. பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை
8. திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகளுக்கு தடை
9. கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ளலாம்.
என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்.