கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், சீனா வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. இதில் முதலில் தாக்கிய சீனா, இந்திய வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
அதன்பிறகு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனாவின் தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.
அதன் பிறகு மத்திய அரசின் இராணுவ நடவடிக்கைகளினால், சீனாவின் ராணுவ வீரர்கள் எல்லையிலிருந்து 2 கிலோமீட்டர்கள் பின்வாங்கிச் சென்றனர். இருப்பினும் கிழக்கு லடாக்கின் டிபிஓ பகுதியில் சீன வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும், சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் குவாதர் துறைமுகம் வரையில் சுமார் 3500 கிலோ மீட்டருக்கு மேல் பட்டுப்பாதை திட்டம் மூலம் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டுப்பாதை சாலை ஆனது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் வழியாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது கிழக்கில் லடாக்கின் டிபிஓ பகுதியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலேயே இந்தப் பட்டுப்பாதை சாலை உள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரானது மீண்டும் இந்தியாவிற்கு கிடைத்து விட்டால் பட்டுப்பாதை திட்டம் அதிரடியாக அழிக்கப்பட்டுவிடும். இதனால்தான் அங்கேயே சீனாவின் ராணுவம் அதிக அளவில் முகாமிட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம், சீனாவின் தரப்பில் டின் வியன் மற்றும் இந்தியாவின் தரப்பில் மேஜர் ஜென்ரல் அபிஜித் பாபத்தும் சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 மணி வரை நடந்தது.
அப்போது லடாக்கின் டிபிஓ பகுதிகளில் இருந்து 10-13 பிபி வரையிலான கண்காணிப்பு குழுக்களை அங்கிருந்து பின்வாங்க வேண்டும் என இந்திய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் மீது நம்பிக்கையற்ற தன்மை இருப்பதால் லடாக்கின் அந்த டிபிஓ எல்லைப் பகுதியில் 100 ஹெரோன் ஆளில்லா விமானங்களில் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர சுகோய் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, எச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டு வருகிறது.