நடப்பாண்டிற்கான போனஸ் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து அது தொடர்பான தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது கெசட்டட் பதவி இல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு (2019-2020) நடப்பாண்டிற்கான போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போனஸ் குறைந்த பட்சம் 30 லட்ச ஊழியர்களுக்கு கிடைக்கும் என்ற தகவலையும் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி உற்பத்தி சார்ந்த மற்றும் உற்பத்தி சாராத போனஸையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்கள் தற்போது இருக்கும் சூழ்நிலையில் தங்களின் குடும்பத்தினருடன் இணைந்து பண்டிகை காலத்தை கொண்டாடுவதற்காக போனஸ் எதிர்பார்ப்பது சரியே. அதனால் மக்களின் நலன் கருதி போனஸ் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
போனஸ் வழங்குவதற்காக மத்திய அரசிற்கு கூடுதல் செலவாக 3 ஆயிரத்து 737 கோடி ரூபாய் செலவாகும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி விஜயதசமி பண்டிகைக்கு முன்பே போனஸ் வழங்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.