எடப்பாடியார் பசங்க நாங்க! முதல்வரை வியக்கவைத்த நாகப்பட்டினம் இளைஞர்கள்!

0
120

தமிழகத்தைப் பொருத்தவரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமீபகாலமாக பல அதிரடி அரிய திட்டங்களை அறிவித்தும், பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியும், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்.அதோடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த அனைத்தையும் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் நிறைவேற்றி தமிழக மக்களிடம் நற்பெயர் வாங்கியிருக்கிறார். அதில் முக்கியமானவை மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் போன்ற திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக தஞ்சாவூர் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்து அதற்கு தனிச்சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. வெகு காலமாகவே இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விவகாரம் தமிழகத்திலே புகைந்துகொண்டிருந்தது மத்திய அரசை தமிழகத்தின தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல கட்ட போராட்டத்தை நடத்தி வந்தார்கள். தமிழக விவசாயிகள் ஆனாலும் இதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

ஆனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாநில அரசின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் இருக்கக்கூடிய தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றி அதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றார்.இதன் மூலம் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை நிறைவடைந்தது. அடுத்து தமிழக விவசாயிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள் அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டாடத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில், நோய்த்தொற்று பரவல் அதிகமாகி பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர் மற்றும் மாணவிகளின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அதிரடி முடிவை எடுத்து அறிவித்தார். அதாவது தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் மற்றும் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து எல்லா மாணவர்களையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவித்து அரசாணை வெளியிட்டார்.இதன்மூலம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மாணவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கான ஆதரவு அதிகரித்தது.

இந்த சூழ்நிலையில், அதிமுக சார்பாக தன்னுடைய இரண்டாம் கட்ட பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பெருந்துறை பூண்டியில் இருந்து ஆரம்பித்தார். திருதுறைபூண்டி அதிமுக சார்பாக வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கும் சுரேஷ்குமாருக்கு அவர் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்று வேதாரணியம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் ஓ எஸ் மணியன் ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதன்பின் அங்கிருந்து நாகப்பட்டினம் வந்து சேர்ந்தார்.

நாகப்பட்டினத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிகாக பிரம்மாண்டமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த பகுதியில் அதிமுகவின் வேட்பாளர் தங்க கதிரவனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார் முதலமைச்சர். அப்போது அவர் அவர்களுக்கு நுழைந்ததுமே அருகில் இருந்த கட்டிடத்தில் வரிசையாக நின்று இருந்த இளைஞர்கள் இடப்படியார் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கு என எழுதிய பதாகைகளுடன் முழக்கமிட்டு இருக்கிறார்கள். இதனை கொஞ்சம் கூட எதிர்பாராத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வந்து பார்வையிட்டு சென்றார்.

Previous articleவேட்புமனு தாக்கல் செய்து விட்டீர்களா? இன்றே கடைசி நாள்!
Next articleஒருவருக்கு இனி இத்தனை பாட்டில் சரக்கு தான்… டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களுக்கு கட்டுப்பாடு…!