75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி!
நாடு முழுவதும் புதியதாக 75 மருத்துவ கல்லூரிகளை தொடங்க நேற்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் படி 2021-2022 ஆண்டுக்குள் மருத்துவ கல்லூரி செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம் சுமார் 15700 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நினைவில் கொண்டும் பொதுமக்களுக்கு இன்னும் பல மருத்துவர்கள் கிடைப்பதற்கும் இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கல்லூரியில் 200 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் மாவட்ட மருத்துவமனையுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலக்கரி சுரங்கம் அது சார்ந்த கட்டமைப்பு துறைகளில் 100 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
டிஜிட்டல் மீடியா எனப்படும் மின்னணு செய்தி துறையில் 26 சதவீதம் அன்னிய முதலீட்டிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஒற்றை வணிகக் குறியீடு உள்ள நிறுவனங்களுக்கு ஆன்லைன் சில்லறை வணிகத்தில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டது. சொந்தமாக விற்பனை மையங்கள் அமைக்கபட வேண்டும் என்ற நிபந்தனையும் ரத்து செய்யப்பட்டது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.