உசைன் போல்ட் சாதனையை எட்டிய நாய்! கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ!
அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள லோகன் நகரில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஓட்டப் போட்டி நடைபெற்றது. பெண்களுக்காக நடைபெற்ற 4*200 மீட்டர் ஓட்டப் போட்டியில், வீராங்கனைகள் பங்கேற்று ஓடிக் கொண்டிருந்தனர்.
இறுதியாக இலக்கை நோக்கி வீராங்கனைகள் ஓடிக் கொண்டிருந்த போது, பார்வையாளர் ஒருவருடன் வந்திருந்த நாய் ஒன்று, போட்டி நடக்கும் டிராக்கில் ஓட ஆரம்பித்தது. வீராங்கனைகள் தங்களது டிராக்கில் ஓட, நாயும் அவர்களை முந்திக்கொண்டு அதிவேகமாக பாய்ந்து சென்றது.
முதலாவதாக சென்ற வீராங்கனை இலக்கு கோட்டை நெருங்கும் நேரத்தில், அவரையும் முந்திக்கொண்டு இலக்கை முதலாவதாகச் சென்று வெற்றி பெற்றது. வேகமாய பாய்ந்தோடிய நாயைப் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
This dog 'won' a high school track meet in Logan, Utah pic.twitter.com/hvlJLpKHL6
— Reuters (@Reuters) April 23, 2021
அதே நேரத்தில், இலக்கை எட்டும் போது முதலாவதாகச் சென்ற அந்த வீராங்கனை, நாயைப் பார்த்து ஒருநொடி அதிர்ச்சியில் பயந்து நடுங்கியது வீடியோவில் அப்பட்டமாக தெரிந்தது. நூறு மீட்டர் ஒடிய அந்த நாய் 10.5 நொடிகளில் நூறு மீட்டரை அந்த நாய் கடந்துள்ளது. அதிவேகமாக ஓடும் வீரரான உசைன் போல்ட் நூறு மீட்டரை 9.58 நொடிகளில் கடந்துள்ளார். அவரது சாதனையை ஒரு நொடியில் முறியடிக்க முடியமல் அந்த நாய் தவறவிட்டது.
அந்த நாய் தான் போட்டியில் வெற்றி பெற்றதாக, சமூக ஊடங்களில் பலர் தெரிவித்து வருகின்றனர். ஏன், விளையாட்டுச் செய்திகளில் பல சேனல்கள் இதனை முக்கியச் செய்திகளாக வெளியிட்டன.