கொரோனா மையத்தில் மட்டும் திடீர் தீ! திட்டமிட்டு நடத்தப்பட்டதா?
கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரையும் முறையான கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தொற்றை கட்டுப்படுத்த தேவையான காரியங்களுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்லுமாறு மக்களிடம் கேட்டுவருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த சூழலில் அதிகப்படியானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவை பற்றாக்குறை அதிக அளவு உள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறையை கட்டுப்படுத்த முன்பைவிட 8 மடங்கு உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளனர்.பலர் ஆக்ஸிஜன் தேவை மற்றும் படுக்கை வசதி இல்லாமல் நீண்ட வரிசையில் மருத்துவமனைகளின் வெளியே காத்துக்கொண்டுள்ளனர்.முக்கியமாக டெல்லியில் இப்பற்றாக்குறை காரணமாக பல ஆயிரம் கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.டெல்லியில் இறந்த உடல்களை தகனம் செய்ய இடமில்லாமல் பூங்காக்களை இடுகாடுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு நடந்துக்கொண்டிருக்கும் நேரத்தில் குஜராத்தின் பரூச் பட்டேல் மருத்துவமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.அந்த அந்த மருத்துவமனையில் கொரோனா சிசிச்சை நடைபெற்று வந்தது.திடீரென்று நள்ளிரவில் கொரோனா தீவிர சிசிச்சை மையம் மட்டும் தீ பிடித்துக்கொண்டது.தீ பிடித்ததும் தீயணைப்பு துறைக்கு 1மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயினை அனைத்தனர்.
அதன்பின் போலீசார் வழக்கு பதிவு செய்தது விசாரணை மேற்கொண்டனர்.இந்த முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் ஐ.சி.யூ வில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்து.இந்த தீ விபத்தில் 14 நோயாளிகள் 2 செவிலியர்கள் உடல் கருகி தீ விபத்தில் இறந்துள்ளனர்.முடிந்த வரை நாங்கள் நோயாளிகளை வேறோரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்தோம்.முடிந்தவரை நாங்கள் அனைவரையும் காப்பாற்ற தான் முயன்றோம்.ஆனால் துரதிஷ்டவசமாக இவ்வாறு நடந்து விட்டது என அந்த மருத்துவமனை மையத்தின் அறங்காவலரான ஜூபேர் பட்டேல் கூறினார்.இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீ விபத்தா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.