கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க!

Photo of author

By Kowsalya

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க!

Kowsalya

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க!

ஒரு வாரம் மட்டும் இந்த இயற்கை டானிக்கை குடித்து வாருங்கள், கல்லீரல் வீக்கம் குறைந்து, கல்லீரல் சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்யும்.

கல்லீரல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. அது எப்பொழுது பழுதாகிறது என்றால் நமது உணவு பழக்க வழக்கங்கள். மேலும் நாகரீக வளர்ச்சி.

துரித உணவுகளை உண்டு கல்லீரலை பழுதக்கி விடுகிறோம்.

கல்லீரலை சுத்தம் செய்யும் அற்புதமான டாணிக்கை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. நிலவேம்பு பொடி

2. கீழாெல்லி பொடி

3. நாட்டு சர்க்கரை

செய்முறை:

1. முதலில் கீழா நெல்லி மற்றும் நிலவேம்பு பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து கொள்ளவும். இரண்டும் 2 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

2. பின் ஒரு கடாயில் பொடிகள் இரண்டு பங்கு என்றால் தண்ணீர் 4 பங்கு ஊற்றி கொள்ளவும்.

3. தண்ணீர் ஒரு கொதி வந்ததும் பொடியை சேர்த்து கொள்ளவும்.

4. பொடி நன்றாக கொதித்த உடன் அதை வடிகட்டி மீண்டும் அதே கடாயில் ஊற்றி கொள்ளவும்.

5. பின் சம அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

6. ஒரு கம்பி பதம் அளவு இருக்க வேண்டும்.

7. இதனை கண்ணாடி ஜாடியில் போட்டு மூடி வைக்கவும்.

8. 20 நாள் வரை பயன்படுத்தலாம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிடலாம். சிறுவர்களுக்கு 2.5 ml, பெரியவர்களுக்கு 10 ml varai கொடுக்கலாம்.

ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு இதனை சாப்பிட்டு வர உடனடியாக கல்லீரல் சுத்தமாகி நன்றாக வேலை செய்யும்.