கஞ்சா கடத்திய வாலிபர்கள் 3 பேர் கைது! காவல்துறை கண்காணிப்பு!
திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமான கவனம் செலுத்தி வருகிறார்கள். எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில் இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதற்கான கண்காணிப்பு, நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருவாரூர் நகர காவல் துறையினருக்கு ரகசிய செய்தி வந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸ் டீம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து அலிவலம் சாலையில் மூன்று பேர் டூவீலரில் வந்துள்ளார்கள் அவரது நடவடிக்கைகளிலும், பேச்சுகளிலும், காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் தீவிர விசாரணை காவல்துறை நடத்தியிருக்கிறார்கள் விசாரணையின் போது அந்த 3 நபர்களும் முன்னுக்குப் பின்னானத் தகவல்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை சோதனையிட்டபோது அவர்களிடம் முக்கால் கிலோ கஞ்சா இருந்ததாக தெரிவித்தார்கள். கஞ்சா கடத்திச் சென்று விற்பனைச் செய்ய அந்த 3 நபர்களும் திட்டமிட்டு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இது குறித்து பேசிய திருவாரூர் காவல்துறையினர் நாங்கள் நடத்திய விசாரணையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 25 வயது இளைஞரான ராஜா காசிலிங்கம் என்பவர் திருவாரூர் அருகில் உள்ள காலணியைச் சேர்ந்தவர், 22 வயதான சிவசங்கர் சுந்தர வளாகம் பகுதியைச் சேர்ந்தவர், மற்றொருவர் 34 வயது ஸ்டாலின் என்பது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து முக்கால் கிலோ கஞ்சா மற்றும் கடத்தலின் போது பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விட்டோம் என தெரிவித்தார்கள்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மன்னார்குடி கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்ந்து கஞ்சா விற்பனை கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுப் படுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் கண்காணிப்போம் தீவிரப்படுத்தப்படும் என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.