தமிழகத்தில் கூடுதல் மின்கட்டணம் கூடாது!! அரசின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!!

0
219

தமிழகத்தில் கூடுதல் மின்கட்டணம் கூடாது:

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் கடுமையாக பரவி வந்தது. இந்த நிலையில், அதனை எவ்வாறு தடுப்பது என்று தெரியாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இருந்தாலும் மக்கள் பொது இடங்களுக்கு சென்று வந்த காரணத்தினால், கொரோனா வைரஸ் தொற்றானது குறையாமலே இருந்தது.

அதன் பின் முழு ஊரடங்கு போடப்பட்டு கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவந்தது. அதனை அடுத்து இரண்டாவது அலை தொடங்கி மக்களை அது மிகவும் பாதித்தது. மேலும் அதுவும் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகிய அனைத்தும் திறக்கப்பட்டன.

ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக மாணவர்கள் அதிகமாக பள்ளிக்கு வரவில்லை. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டன. அதனை அடுத்து மாணவர்களின் பொது தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர்.

அதுமட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அரசு அவர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வந்தது. மேலும் சில சலுகைகளையும் அவ்வப்போது அறிவித்த வண்ணம் இருந்து வந்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை மாத மின்கட்டணத்தை கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கக் கூடாது என மின் வாரியம் அறிவித்து உள்ளது. மேலும், காப்பு வைப்பு தொகை வசூல் என்ற உத்தரவை திரும்பப் பெறுவதாகவும் கூறியுள்ளது.

மின் இணைப்பைப் பெறும் போது தெரிவித்திருந்த அளவை விட அதிகம் பயன்படுத்தினால் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படும் என கூறியுள்ளது.

Previous articleஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு இப்படித்தான் குழந்தை பிறக்கும்! அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!
Next articleபாராளுமன்ற மழைக்கால கூட்டம் லைவ்!! ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த இறப்பும் இல்லை!! ‘பெகாசஸ் திட்டம்’!! இரு அவைகளும் ஆதிக்கம்!!