இரண்டு நாட்களுக்குள் பணத்தை கட்டுங்கள் தனுஷ் !! உத்தரவிட்ட நீதிபதி!!
சில நாட்களாகவே சினிமா வட்டாரங்கள் மற்றும் பொது மக்களால் பேசப்பட்டு வருவது தான் வரி விலக்கு பிரச்சனை. மேலும் இந்த பிரச்சனை அண்மையில் நடிகர் விஜய் மூலம் ஆரம்பமானது. விஜய் தனது இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது.
அதைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு கேட்டதற்காக விஜய்க்கு நீதிமன்றம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், வரி ஏய்ப்பு ஏதும் செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து விஜய் அண்மையில் தான் கொரோனா நிவாரண நிதி கொடுத்ததாக என்னால் மறுபடியும் நிவாரண நிதி செலுத்த முடியாது என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்பொழுது விஜையை போல தனுஷும் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்த தன் சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனுஷின் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு 60.66 லட்சம் ரூபாய் வரி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்த வரி விலக்கு கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு தாக்கல் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி 50 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்கும் பால்காரர் கூட பெட்ரோல் வரி கட்டுகிறார். மேலும் சோப்பு வாங்கும் சாமானியர் கூட டேக்ஸ் கட்டுகிறார். ஆனால் சமுதாயத்தில் நல்ல நிலைமையில் இருக்கும் உங்களை போல நடிகர்கள் தான் வரி விலக்கு கோரி நீதிமன்றத்தை நாடுகின்றனர் என்று தனுஷை கண்டித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து தற்போது இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பில் 50 சதவீதமான 30 லட்சம் வரியைக் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த 30 லட்சம் ரூபாய் வரியை 48 மணி நேரத்தில் கட்ட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.