9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்கள்! மாவட்டம் தோறும் தேர்தல் பறக்கும் படை!

0
152

தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.

தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்கும் உச்ச நீதிமன்றம் அவகாசம் தர மறுத்து விட்ட படியால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது தேர்தல் ஆணையம்.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் விதத்தில் பறக்கும் படை அமைக்க தேர்தல் ஆணையம் சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, என்று ஒட்டுமொத்தமாக 7கட்சிகள் களம் காண இருக்கிறது.

இந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்புமனுத்தாக்கல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில், வேட்பு மனுத்தாக்கல் நாளை உடன் முடிவடைய இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் மூக்குத்தி, தங்கமோதிரம், குத்துவிளக்கு, உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வேட்பாளர்கள் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், இதுபோன்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை தவிர்க்கும் விதத்தில் ஒரு செயல் குற்றவியல் நீதிபதி மற்றும் இரண்டு காவலர்களை கொண்ட பறக்கும் படை அமைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மாவட்டம் தோறும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு கடிதத்தில் 3 ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய தொகுப்பிற்கு ஒரு பறக்கும் படை அமைக்க உத்தரவிட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் இந்த குழு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யவேண்டும். பறக்கும் படைகளின் ஆய்வு பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

Previous articleஇதற்காக தான் ஒட்டுமொத்த திமுகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது! வேலூரில் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!
Next articleதமிழகத்தில் தலைதூக்கும் கஞ்சா விவகாரம்! என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தமிழக அரசு!