மழை வெள்ளத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்.!!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

0
132

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, உத்தரகண்டில் ஒரு வாரமாக பெய்த கனமழையால் மாநிலம் முழுவதும் அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது காலம் தேவைப்படும்.

சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவால் ஆற்று நீர் கிராமங்களை பாதித்துள்ளது. நிறைய பாலங்களும் இடிந்து விழுந்துள்ளன. முதலில் நாம் சாலைகளை சீரமைக்க வேண்டும். வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் அந்தந்த பகுதிகளில் இருக்கும் அதிகாரிகளை மக்களுக்கு தடையின்றி உணவு, தண்ணீர் கொடுக்க அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் எனவும், தற்காலிக மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலா ரூ.10 கோடி அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஉச்சத்தைத் தொட்ட பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!
Next articleஹோட்டலில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஊழியருக்கு அரிவாள் வெட்டு.!! பதபதைக்கும் வீடியோ காட்சிகள் .!!