பாமக நிர்வாகி கொலை: தமிழகத்தில் 144 உத்தரவு…

Photo of author

By Parthipan K

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்தவர் தேவமணி (53). இவர் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளார் பகுதியில் வசித்து வந்தார்.

நேற்று இரவு இவர் கட்சி பணி முடித்து விட்டு வீடு திரும்பிய போது திடீரென வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது.

தலை மற்றும் உடம்பில் பல காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் உயிரிழந்தார். இவர் மீது ஏற்கனவே பல கொலை முயற்சிகள் நடைபெற்றது குறிப்பிட தக்கது. இந்நிலையில் அவருடைய கொலைக்கு காரமாணவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவருடைய வீடு, கட்சி அலுவலகம், அந்த தெரு என அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தை தடுக்கும் விதமாக காரைக்கால் ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா அந்த பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் பார்க்க: https://www.news4tamil.com/pmk-secretary-murder-in-karaikal/