நாட்டில் நோய் தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்தது!

0
167

நாட்டில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1.37 லட்சமாக குறைந்தது. இது கடந்த 264 தினங்களில் பதிவான மிக குறைவான எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது.

நாட்டில் நேற்றைய தின நோய்த்தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்க கூடிய அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,

தற்சமயம் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் ஒட்டுமொத்த சதவீதம் 98.26 சதவீதமாகவும், பலியானோரின் சதவீதம் 1.34 ஆகவும், இருக்கிறது. அதோடு தற்சமயம் 0.40 சதவீதம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

நாட்டில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 110.78 கோடி தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இதில் நேற்று மட்டும் 53 லட்சத்து 81 ஆயிரத்து 889 நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleசென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Next articleகனமழையால் தமிழகம் முழுவதும் தத்தலித்தாலும் இவர்களுக்கு மட்டும் தினம் தோறும் கொண்டாட்டம்தான்!