தமிழ்நாட்டில் 12வது தடுப்பு முகாமில் 16.05 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது! சுகாதாரத்துறை தகவல்!

0
152

நோய் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதைத்தவிர வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரையில் 11 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று இருக்கின்றன. இவற்றில் 2.6 கோடி நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளார்கள். இந்த சூழ்நிலையில், 12வது மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நேற்று நடைபெற்றது.

இவற்றில் 16 லட்சத்து 5 ஆயிரத்து 293 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 5 லட்சத்து 89 ஆயிரத்து 140 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 10 லட்சத்து 16 ஆயிரத்து 153 பேர் இரண்டாவது தவணை தடுப்புஊசியும், செலுத்திக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் இதுவரையில் 78.35 சதவீதம் நபர்கள் முதல் தவணைத் தடுப்பூசியும், 43.86 சதவீதம் நபர்கள் இரண்டாவது தவணை தடுப்புஊசியும், செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் நேற்றையதினம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றதால் இன்று தடுப்பூசி பணிகள் நடைபெறாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Previous articleநாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
Next articleதொடர் கனமழை இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?