ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான பனிப் பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் உள்ள 15 மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. மேலும் இந்த கடுமையான பனிப் பொழிவின் காரணமாக, ஏராளமான வீடுகள் இடிந்து உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. பனிப் பொழிவின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்காக அவர்கள் கடுமையாக போராடி வருவதாக பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கடுமையான பனிப்பொழிவு காரணமாக, ,நெடுஞ்சாலைகளில் சிக்கித் தவித்து வந்த நூற்றுக்கணக்கான மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவு, மக்களின் வேலையின்மை, பட்டினி மற்றும் வறட்சிக்கு காரணமாக அமைந்துள்ளது