அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்! விடியல் அரசின் தரமற்ற செயல்! 

0
117
Tragedy befalls infant at government hospital! Non-standard act of the dawn government!
Tragedy befalls infant at government hospital! Non-standard act of the dawn government!

அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்! விடியல் அரசின் தரமற்ற செயல்!

பத்து ஆண்டுகள் கழித்து தற்பொழுது தான் திமுக ஆட்சியை கைப்பற்றியது. திமுக ஆட்சியை கைப்பற்றியதும் விடியலை நோக்கி தமிழகம் இருக்கும் என எண்ணி மக்கள் பலர் ஓட்டு போட்டனர். அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம் அளிக்கும் விதமாக விலைவாசி ஏறியது தான் மிச்சம். மக்களுக்கு சலுகைகளை வழங்குவது போல் ஒரு பக்கம் வழங்கிவிட்டு மறுபக்கம் அதற்கேற்றார் போல் விலைவாசியை உயர்த்தி விடுகிறது. இவர் இருக்கும் சூழலில் திமுக கூறிய அறிக்கைகளை இன்றளவும் நிறைவேற்றாமல் உள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.1000, நீட் தேர்வு ரத்து, எரிவாயு விலை குறைவு போன்றவற்றை நிறைவேற்றாமல் உள்ளது.

இவர் இருக்கையில் 2020 மற்றும் 23ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்துவத்துறைக்கு என்று ரூ.17,091 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டோம் அவ்வபோது மருத்துவமனைகள் தரம் உயர்த்தவும் அவ்வபோது நிதி ஒதுக்கப்பட்டடு வருகிறது.இவ்வாறு ஒதுக்கியும் மருத்துவமனைகள் தரம் இன்று அளவும் உயர்த்தப்படாமல் உள்ளது. பல அரசு மருத்துவமனைகளில் தற்போது வரை தேவையான உபகரணங்கள் இன்றியே செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு மருத்துவமனையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் பரங்கிநாதபுரத்தை வசிப்பவர் தான் முனியசாமி மற்றும் முத்துலட்சுமி. இவர்கள் இருவருக்கும் முதல் குழந்தை ஒன்று உள்ளது. இரண்டாவது குழந்தைக்காக சிகிச்சை பெற விருதுநகரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் குழந்தை நல்ல முறையில் பிறந்துள்ளது.

தொடர்ந்து இருவரும் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். அவ்வாறு குழந்தை மற்றும் தாய் இருவரும் இரும்பு கட்டிலில் படுத்து கொண்டிருந்த வேலையில் திடீரென்று கட்டில் உடைந்தது. கட்டில் ஒடைந்த நிலையில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்.

தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு நேர்ந்ததை அடுத்து படத்தை உயர்த்துக் கோரியும் இது குறித்து விசாரணை செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் வெடித்த கோரிக்கையின் பெயரில் தற்போது தனி குழு அமைத்து விசாரணை நடைபெற்ற வருகிறது.

இந்த விசாரணையில் குழந்தையின் தாயும் இருந்த கட்டிலில் பார்க்க வந்தவர்கள் நான்கு பேர் அமர்ந்து இருந்ததால் கட்டில் உடைந்தது என்று மருத்துவமனையின் டீன் கூறியுள்ளார். இரண்டு அல்லது மூன்று பேர் உட்கார்ந்தால் கூட இரும்பு கட்டில் உடையது. மூன்று பேருக்கு மேல் உட்கார்ந்ததால் கட்டில் உடைந்தது என்று சப்பக்கட்டு கட்டி வருகின்றனர். மருத்துவமனைகளின் தரம் உயர்த்த ஒதுக்கப்படும் நிதி எல்லாம் வேறு எங்கும் செலவாகி வருகிறது என இதன் மூலம் விடியலரசு வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Previous articleசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சிவகார்த்திகேயன்!
Next articleஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு செல்ல தடை!