Africa:2019 ல் பரவிய கொடூர வைரஸ் கொரோனா வை விட மோசமான வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
முன்பு போல் இல்லாமல் தற்போது திடீர் திடீர் என்று புது புது வைரஸ்கள் உருவாகி பரவி வருகிறது. இதனால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். தற்போது புதிதாக bleeding eye என்ற வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் இப்போது ஆப்பிரிக்க நாடுகளை சூறையாடி வருகிறது. அதிலும் முக்கியமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் மிகவும் மோசமான நிலை.
இதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் கடந்த 2 மாதங்களில் இது 17 ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரவியுள்ளது.அதில் ருவாண்டா, உகாண்டா,காங்கோ,பிரேசில், கென்யா, பொலிவியா ஆகிய நாடுகளில் 15 நாடுகளுக்கு செல்வோருக்கு எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த bleeding virus எனப்படும் மார்பர்க் வைரஸ் இருக்ககூடிய வைரஸ் களில் மிகவும் மனிதர்களுக்கு ஆபத்தான வைரஸ் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்த வகை வைரஸ் வெளவ்வால் இனத்தில் ஒன்றான ருசெட்டஸ் எஜிப்டியாகஸ் என்ற வைகை வெளவ்வால்களில் தான் இந்த வைரஸ் இருக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதற்கான அறிகுறிகள் நமக்கு பரவிய 2 முதல் 21 நாட்களுக்குள் தென்பட தொடங்கும். காய்ச்சல் மற்றும் அதிக தலைவலி, உடல்வலி போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். 5 ம் நாள் முதல் வாந்தி மலத்தில் ரத்தம்,மூக்கு,கண், காது, வாய் ஆகியவற்றில் ரத்தம் கொட்டும். மேலும் ஆண்களுக்கு ஆணுறுப்பு வீங்கவும் செய்யும். 9 நாட்களில் தீவிரமடைந்து உயிரிழக்க கூடும் என கூறப்படுகிறது.
இது கொரோனா போன்ற காற்றில் பரவாமல் தொடுவதன் மூலமும்,அவர்கள் பயன்படுத்தியதை பயன்படுத்துவதன் மூலமும் மொத்தத்தில் தொடுவதால் பரவுகிறது.இதற்கு சிகிச்சை இல்லை இதற்கு அதிக நீரை பருகுவது மட்டுமே சிகிச்சை முறை என கூறப்படுகிறது.