ஸ்டாலின் போல அன்புமணி இருக்க வேண்டும்.. கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ்!!

0
51
Anbumani should be like Stalin.. Ramadoss spoke about the alliance!!
Anbumani should be like Stalin.. Ramadoss spoke about the alliance!!

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே தலைவர் பதவிக்கு மோதலானது இருந்து வருகிறது. இதில், ராமதாஸ் ஒரு பக்கம் நான் தான் தலைவர் எனக் கூறி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் என்று பலரை நியமித்து வருகிறார். மறுபக்கம் அன்புமணி ராமதாஸ் நியமித்த அனைவரையும் கட்சியை விட்டு நீக்கி வருகிறார். அந்த வகையில் நேற்று சேலம் எம்எல்ஏ அருளுக்கு இணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு எதிராக அன்புமணி அவரை கட்சியை விட்டு நீக்கி மறு அறிவிப்பை வெளியிட்டார். இவர்களின் செயல்களால் கட்சி நிலை குலைந்துள்ளது. அதேபோல சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் அவர்களின் 60வது திருமண விழாவானது நடைபெற்றது. இதில் அன்புமணி மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது ரீதியாக சமூக வலைத்தளத்தில் பலரும் பல விமர்சனங்கள் கூறி வந்தனர். ஆனால் ராமதாஸ் வாய் திறக்காமல் இருந்தார். தற்போது இது ரீதியாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அதில், எந்த பிரச்சனைக்கும் முடிவு என்பது கட்டாயம் உண்டு, அதிலும் பாமக விவகாரம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தான் வருகிறது. என்னால் தான் இந்த கட்சி தொடங்கப்பட்டது அதனால் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதுமட்டுமின்றி கலைஞர் கருணாநிதி எப்படி சாகும் வரை அவரே தலைவராக இருந்தாரோ அதேபோல தான் நானும் பாமகவின் தலைவராக இருப்பேன். திமுகவில் ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தது போல அன்புமணி செயல்பட வேண்டும். ஆனால் அந்த பொறுப்பை அன்புமணி ஏற்கவில்லை.

திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி தலைவராக இருந்த வரையில் ஸ்டாலின் செயல் தலைவராக தான் இருந்தார் அவர் தரப்பிலிருந்து எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மேற்கொண்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்களின் கருத்துக்களில் வேறுபாடு இருந்தாலும் அவர்களை கொச்சைப்படுத்துவது மிகவும் தவறு என கூறினார். மேலும் எனது அறுபதாவது திருமண விழா நிகழ்ச்சியில் அன்புமணி கலந்து கொள்ளாதது எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்று கூறியதை விட சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும்  தெரிவித்துள்ள்ளார்.

Previous articleமாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; இனி 5 நாட்கள் தான் பள்ளி!
Next articleகிருஷ்ணா செல்போனில் சிக்கிய கோட் Word.. அடுத்தடுத்து மாட்டப்போகும் திரை பிரபலங்கள்!!