உங்கள் மார்பகத்தின் அளவுகள் ஒரே மாதிரியாக இல்லையா!! வித்தியாசம் ஏன்!!

உங்கள் மார்பகத்தின் அளவுகள் ஒரே மாதிரியாக இல்லையா!! வித்தியாசம் ஏன்!!

ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பக அளவு வேறுபடும். வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மரபு ரீதியாக என்று பலவிதமான காரணங்கள் ஒரு பெண்ணின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும். மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வரும் காரணத்தால், மார்பக ஆரோக்கியம் பற்றி தற்போது அதிக விழிப்புணர்வு காணப்படுகிறது. இளம் பெண்ணுக்கு மார்பகம் வளரத்தொடங்கும் காலம் முதல், பூப்படைதல், கர்ப்பகாலம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மார்பகத்தின் அளவு வேறுபடும்.

பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய சந்தேகம், மார்பங்கள் ஒரே அளவில் இல்லையே, இது இப்படித்தான் இருக்குமா, இல்லை ஏதும் பிரச்சனையா? எல்லா பெண்களுக்கும் மார்பகங்கள் ஒரே அளவில் ஒரே வடிவில் இருக்காது.

ஒரு பெண்ணின் இரண்டு மார்பகங்களுமே ஒரே அளவில், ஒரே வடிவத்தில் இருக்காது. ஒரு மார்பகம் சிறிய அளவிலும் ஒரு மார்பகம் பெரிய அளவிலும் காணப்படுவது மிக மிக இயல்பானது. இவ்வாறு இருப்பது எந்த ஒரு பிரச்சனையும் உண்டாக்காது. ஆனால் மிகவும் வேறுபட்ட விதமாக வீக்கம் போன்று தோன்றுகிறது என்றால் மருத்துவரை ஆகுவது மிகவும் நல்லது.

மார்பகங்களில் ஒன்று சிறியதாகவும் ஒன்று பெரியதாகும் இருப்பது பற்றி கவலையே பட தேவை இல்லை. பெரும்பாலானவர்களுக்கு வலது பக்க மார்பகம் பெரிதாகவும், இடது பக்க மார்பகமும் சிறிதாகவும் இருக்கும். ஆனால் இந்த மாற்றம் திடீரென்று காணப்பட்டால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

பெண்களில் பலரும் தங்களுக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களை வெளியில் கேட்கவே தயங்குவார்கள் அதில் ஒன்றுதான் இந்த மார்பகத்தின் அளவு வேறுபட்டு இருப்பது தனக்கு மட்டும்தான் அப்படி இருக்கிறது என்று நினைத்து பயப்படுவார்கள் ஆனால் இதுபோன்று நிறைய பெண்களுக்கு இருக்கும் இதை கண்டு பயப்பட தேவையில்லை இது இயல்பான ஒன்றுதான்.