அதிமுக-வின் முதுகில் குத்தும் பாஜக.. கூட்டணிக்குள் உச்சக்கட்ட பரபரப்பு!!

0
190
BJP stabs AIADMK in the back.. Extreme excitement within the alliance!!
BJP stabs AIADMK in the back.. Extreme excitement within the alliance!!

ADMK BJP: தமிழகத்தில் இம்முறை அரசியல் களமானது அனல்பறக்க இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதிலும் இம்முறை அதிமுக திமுக தவெக பாஜக என நான்கு முனை போட்டி இருக்கும். அதிலும் தற்போது வந்த தவெக விற்கு எதிர்பாரா அளவிற்கு ஆதரவு உள்ளது என்பதால் வாக்கு வங்கி சிதறக் கூடும். இதனை தடுக்கவே அனைத்து கட்சிகளும் முயற்சித்து வருகிறது. ஆனால் பாஜக அதிமுக வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அந்த கட்சியையே பின்னால் அனுப்பும் முயற்ச்சியில் இறங்கியுள்ளனர்.

அதிலும் வரும் நாட்களில் தான் அதனை புரிந்துக் கொள்ள முடிந்தது. குறிப்பாக ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காகத்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் தற்போது அதிமுக மூலம் தென் மாவட்ட தொகுதிகளை அதிகளவு கைப்பற்றி ஆட்சி புரிய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் உள்ளனர். அதாவது கடந்த தேர்தலில் பல தென் மாவட்ட இடங்களில் அதிமுக-வை கடந்து பாஜக இரண்டாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. அதவாது முக்குலோத்தோர் வாக்குகளை அதிமுகவை விட பாஜக வால் கவர முடியும் என நினைக்கின்றனர்.

அதனால் அதிமுக-வை காட்டிலும் அதிகள வு தொகுதிகளை பாஜக பெற்று அதற்கேற்ற வாக்களர்களை நிற்க வைக்க ஆலோசனை செய்து வருகின்றனர். அதிலும் ஓபிஎஸ் மூலம் பெறப்பட்ட வாக்குகள் அனைத்தையும் தற்போது நயினார் நாகேந்திரனை வைத்து பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அமித்ஷா தான் இதற்கான திட்டங்கள் அனைத்தையும் வகுத்து வருகிறாராம்.

Previous articleகட்டாயம் இவர்களுடன் கூட்டணி இல்லை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அதிமுக!!