நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் விஜய் டிவியில் மிமிக்கிரி ஆர்கெஸ்ட் ஆக சேர்ந்து தன்னுடைய கடின உழைப்பால் தொகுப்பாளராக மாறி அதன்பின் சினிமா துறையில் சிறு சிறு வேடங்கள் மூலம் நுழைந்து தற்பொழுது மிகப்பெரிய ஹீரோவாக அவதரித்திருக்கிறார்.
நடிகர் விஜய் மற்றும் அஜித்திற்கு பிறகு இவரை சினிமா துறையில் சிறந்து விளங்கப் போகிறார் என்று பலரும் கூறிவரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தன்னோடு சரிவர பேசுவதில்லை என்று மனமடைந்து கூறி இருக்கிறார் காமெடி நடிகர் பிளாக் பாண்டி அவர்கள்.
இவர் தன்னுடைய அண்மை பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது :-
சிவகார்த்திகேயன் அண்ணாவிடம் நான் பேசி வெகுநாட்கள் ஆகிவிட்டது. அவர் என்னோடு பேசுவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக சின்ன திரையில் பணிபுரியும் போது இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், தற்பொழுது சிவகார்த்திகேயன் மட்டும் தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளார்.
இதனால் அவரை சந்திக்க சென்ற பிளாக் பாண்டி அவர்களிடம் நடிகர் சிவகார்த்திகேயன் 20,000 ரூபாய் பணத்தினை கொடுத்திருக்கிறார். ஆனால் பிளாக் பாண்டி அவர்களோ, தனக்கு பணம் எதுவும் வேண்டாம் என்றும் உடல்நிலை சரியில்லை என்றால் கூட பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் எனக்காக உங்களுடைய படங்களில் வாய்ப்பு பெற்று தர முடியுமா என கேட்டிருக்கிறார்.
பிளாக் பாண்டியின் அம்மாவோ அந்த 20,000 ரூபாயிலிருந்து 20 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு என்னுடைய மகனுக்கு தங்களுடைய படங்களில் ஏதேனும் வாய்ப்புகளை கற்றுக் கொடுங்கள் என்று கேட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் அதன் பிறகு சிவகார்த்திகேயன் அவர்களை தன்னால் சந்திக்க முடியவில்லை என்று தெரிவித்ததுடன் மட்டுமின்றி, சினிமா துறையில் இன்று வரை தனக்கான நல்ல வாய்ப்பு அமையவில்லை என்றும் வருத்தப்பட்டு கூறி இருக்கிறார்.