ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 5, 2025
Home Blog Page 5654

தனது முழு சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்த சன்னி லியோன்! மனதை நெகிழ வைத்த சம்பவம்!!

0

தனது முழு சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்த சன்னி லியோன்! மனதை நெகிழ வைத்த சம்பவம்!!

பிரபல இந்திய சினிமா நடிகை சன்னி லியோன் செய்த சமூக சேவை பொது மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.

நடிகை சன்னி லியோன் ஆரம்பகால சினிமாவில் ஆபாச படங்களில் நடித்து வந்தார். பின்னர் நல்ல கதையம்சமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்கிற வித்தியாசமான கதையில் நடித்து வந்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அப்படம் பாதியிலேயே நின்றது.

இதனையடுத்து, தனது சொந்த வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவான “கரன்ஜித் கவுர் த அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற வெப்சீரிசில் நடித்து வந்தார். அதேபோல தற்போது ஒரு காமெடி வெப்சீரிசிலும் நடித்துள்ளார். அதைப்பற்றி சன்னிலியோன் கூறியதாவது:

காமெடியான விஷயங்கள் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும், மற்றவர் முகத்தில் புன்னகையை வரவழைப்பது எல்லோராலும் முடியாத காரியம் என்பதால் அனைவரையும் உற்சாகபடுத்த நடித்து வருவதாகவும் கூறினார்.

தற்போது நடித்து வரும் தொடரின் மூலம் கிடைத்த தனது முழு சம்பளத்தையும் மும்பையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்து பல கோடிகள் சம்பளம் வாங்கி பணத்தை குவித்தாலும், பிறருக்கு நன்மை செய்யும் மனம் வெகு சிலருக்கே உண்டு என்பதையும் இதுபோன்ற செயல்கள் நிரூபிக்கின்றன. ஆதரவற்றோர் இலத்திற்கு உதவிய நடிகை சன்னி லியோனுக்கு பாரட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டர் ஜாமினில் வெளி வந்தார்

0

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டர் ஜாமீனில் வெளி வந்தார்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் ,காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன்2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இரவு படப்பிடிப்பின்போது மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்து உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்பட 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.

இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். நடிகர் கமலஹாசன் இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகை காஜல் அகர்வால் நூலிழையில் உயிர் தப்பினர்.

காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் இயக்குனர் ஷங்கர் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்திருந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் மற்றும் கிரேன் உரிமையாளர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவருக்கு அம்பத்தூர் நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கி உள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பும் இந்தியா – தாங்கி பிடிப்பாரா ரஹானே !

0

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பும் இந்தியா – தாங்கி பிடிப்பாரா ரஹானே !

இந்திய தனது இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாம் நாள் முடிவில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இந்திய அணியில் ரஹானே (46), மயங்க்(34) மற்றும் ஷமி (21) ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் சொதப்ப இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக வீசிய டிம் சவுத்தி மற்றும் ஜேமீஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதையடுத்து நேற்ற்று தங்கள் இன்னிங்ஸை துவங்கிய நியுசிலாந்து அணி நிதானமாக விக்கெட்களைப் பறிகொடுக்காமல் விளையாடியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் அவுட் ஆகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்றொரு வீரரான ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் நியுசிலாந்து 216 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்று தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி மேலும் 132 ரன்கள் சேர்த்து 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களயும் இழந்து தங்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதன் மூலம் நியுசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பாக பந்துவீசிய இந்தியாவின் இஷாந்த் சர்மா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இது அவரது 11 ஆவது 5 விக்கெட் இன்னிங்ஸாகும்.

அதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷா 14 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் வந்த புஜாரா ஆமை வேகத்தில் விளையாண்டு கடைசியி 11 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கபப்டட் கோலி 19 ரன்களில் வெளியேற, மயங்க் அகர்வால் அரைசதம் அடித்து 58 ரன்களில் அவுட் ஆனார். முதல் இன்னிங்ஸ் போலவே பொறுப்புடன் விளையாடி வரும் ரஹானே 25 ரன்களுடனும் ஹனுமா விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்தை விட இந்தியா 39 ரன்கள் பின் தங்கி உள்ளது.

அமரேந்திர பாகுபலியாக மாறிய டொனால்ட் டிரம்ப்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

0

அமரேந்திர பாகுபலியாக மாறிய டொனால்ட் டிரம்ப்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு நாளை வருகை தரவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்கும் விதமாக இணையத்தில் வைரல் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு பிறகு டிரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் குஜராத்தின் சபர்மதி ஆசிரமம் மற்றும் டெல்லி ஆக்ரா போன்ற பகுதிகளை பார்வையி இருக்கிறார். இந்த சந்திப்பின் மூலம் சில முக்கியமான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்புண்டு என்றும் தகவல் வருகிறது. அவரின் வருகைக்காக குஜராத் தயாராக உள்ளது.

அமெரிக்க அதிபரை வைத்து சமூக வலைதளங்களில் நகைச்சுவையான பல்வேறு மீம்ஸ்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட பாகுபலி திரைப்படத்தின் காட்சிகளை வைத்து டிரம்ப்பின் முகம் எடிட் செய்யப்பட்ட நிலையில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த காட்சியில் டிரம்ப் சண்டைபோடுவது போலும், குதிரை மீது சவாரி செய்வது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ டுவிட்டரில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் அந்த வீடியோவை வரவேற்கும் விதமாக ரீடுவிட் செய்துள்ளார்.

இந்தியாவில் எனக்கு நல்ல நண்பர்கள் இருப்பதாக அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து ரசித்து வருகின்றனர். 2015 க்கு பிறகு வரும் அமெரிக்க அதிபரை வரவேற்க இந்தியாவின் சிவப்பு கம்பளம் தயாராக உள்ளது. டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடியின் சந்திப்பு இரண்டு நாடுகளுக்குமான ஒற்றுமையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது

0

சென்னையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது

சென்னையில் பெட்ரோல் டீசலின் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்ந்து உள்ளது மற்றும் டீசலின் விலை 5 காசுகள் உயர்ந்து உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையில் உயர்வுக்கு ஏற்ப இந்தியாவில் அடிக்கடி பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. பெட்ரோல் டீசலின் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 74.73 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. டீசலின் விலை ஒரு லிட்டர் ரூ 68. 27 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் சென்னையில் பெட்ரோலின் விலை நேற்றைய விலையை விட 8 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ 74.81 ஆகவும், டீசலின் விலை நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ 68.32 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் ஆனது இன்று காலை முதல் அமலுக்கு வந்தது .

ஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!!

0

ஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!!

திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், NRC, NPR ஆகியவற்றை செயல்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசம் காப்போம் பேரணி நடத்தினர். இதில் விசிக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன்; எழுபது வயதுவரை அரசியல் பேசி ஆட்சி அதிகாரத்தில் உட்கார நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 வருடங்களாக மக்களுக்கு அரசியல் சேவை செய்த விசிக கட்சி ஏன் ஆட்சி அதிகாரத்திற்கு வரக்கூடாது என்று காட்டமாக பேசினார். நாங்கள் கூலிக்கு மாரடிக்கும் கும்பல் இல்லை, வெற்று கோஷம் போடும் கும்பலாக விசிக கட்சி இருக்கும் என்று கனவு காண வேண்டாம் என்று கூறினார். மேலும் நாங்களும் ஆட்சியை பிடித்து ஒரு நாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில்;
குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்குமே எதிரானது என தெரிவித்தார். மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜகவை அரசியல் கட்சியே இல்லை என்றும், அக்கட்சி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கப் பார்ப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

70 வயது வரை பதவிக்காக காத்திருப்பவர் என்று, திமுக செயல்தலைவர் ஸ்டாலினை மறைமுகமாக பேசினாரா? அல்லது பாமக ஆட்சியை பிடிப்பது உறுதி என்று கூறிய ராமதாஸ் மற்றும் அன்புமணியை குறிப்பிட்டு பேசினாரா? என்று தெரியவில்லை. நாங்களும் ஆட்சிக்கு வருவோம் என்கிற பேச்சினால் திமுக விசிக கூட்டணியில் நாளை விரிசல் வருமோ..? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இன்று கோட்டையில் கொடியேற்றுவோம் என்று கூறிய விசிகவை, அன்று கலைஞர் கருணாநிதி உங்களுக்கெல்லாம் பொது தொகுதி தரமுடியாது என்று மறுத்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

இட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலை! மத்திய அரசின் துரோகத்திற்கு ஆதாரம் இதோ

0

இட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலை! மத்திய அரசின் துரோகத்திற்கு ஆதாரம் இதோ

காலங்காலமாக அரசு வேலைவாய்ப்பில் முன்னேறிய வகுப்பினரே மட்டுமே மீண்டும் மீண்டும் அமர்வதை தடுத்து அதிகாரப் பரவலை ஏற்படுத்தும் நோக்கும் கொண்டு வரப்பட்டதே இட ஒதுக்கீடு.

இட ஒதுக்கீடு என்பதே சமூக நீதியின் அடையாமாகத் தெரிகிறது.இட ஒதுக்கீட்டு முறை இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முஸ்லீம்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.பின்பு இதர சிறுபான்மையினருக்கும் வழங்கப்பட்டது.

அதன் பின்பு அது பட்டியலின மக்களுக்கும் வழங்கப்ப்டடது.பின்பு சுதந்திர இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் ஒளியேற்றும் விதமாக வி.பி.சிங் அவர்கள் 20 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் வழங்கினார்.

இட ஒதுக்கீட்டை சிறப்பாக நடைமுறைப் படுத்தியதில் தமிழகம் முக்கிய பங்கை வகிக்கிறது.அதன் விளைவாகத்தான் இன்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் முன்னேறியுள்ளது.

ஆனால் இத்தகைய இட ஒதுக்கீட்டு முறையை தவிடு பொடியாக்கியுள்ளது மத்திய பாரதிய ஜனதா அரசின் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு.

இந்த பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடானது சமூகத்தில் முன்னேறிய வகுப்பினராக அறியப்பட்டு ஆனால் உண்மையில் அவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தால் அவர்களை முன்னேற்றவே கொண்டு வருகிறோம் என்று கூறப்பட்டது.

5 ஏக்கருக்கு குறைவான நிலமும், 1000 சதுர அடிக்கு குறைவான வீடும்,ஆண்டுக்கு 8 இலட்சம் வரை வருமானமும் இருந்தால் அவர்கள் ஏழைகள் என மத்திய அரசு வரையறுக்கிறது.

அதாவது மாதம் மாதம் 65,000 வரை வருமானம் கிடைத்தாலும் அவர்கள் முன்னேறிய வகுப்மில் இருந்தால் அவர்களை ஏழை என வரையறுக்கிறது மத்திய பாஜக அரசு.

இந்த பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு சமீபத்தில் மத்திய அரசில் நிரப்பப்பட்ட அஞ்சல் துறை வேலை வாய்ப்பில் நடைமுறைக்கு வந்துள்ளது.அதன் கட்ஆஃப் விவரம் எஸ்.சி: 94.4, எஸ்.டி:89.6 ஓபிசி: 95 பொது: 95 ஆனால் இதே பொதுப்பட்டியலில் வரும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்: 42.5

இதுதான் சமூக நீதியா? இது நியாயமான முறைதானா என்றும் சமூக நீதியை சீர்குலைக்கும் செயல் என்றும் அதிகாரப் பரவலை தடுக்கும் செயல் என்றும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் தங்களது அதிருப்திகளை தெரிவித்து வருகின்றனர்.

மார்ச் 7ஆம் தேதி அயோத்தி செல்கிறார் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

0

மார்ச் 7ஆம் தேதி அயோத்தி செல்கிறார் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

வருகிற மார்ச் 7ம் தேதி ராமர் கோவிலில் வழிபாடு செய்வதற்காக அயோதி செல்ல இருக்கிறார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே.

இதுகுறித்து சிவசேனாவின் சஞ்சய் ராவத் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு 100 நாட்களை கடந்து சாதனை படைத்து வருகிறது .

வருகிற மார்ச் 7ம்தேதி உத்தவ் தாக்கரே ராமர் கோவிலில் வழிபாடு செய்ய இருக்கிறார். அன்று மாலை சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி விழாவிலும் கலந்து கொள்கிறார்.

இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி மாநிலத்தில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து புதிய முதல்வராக பதவியேற்றார். அதன் பிறகு முதல் முறையாக வரும் ஏழாம் தேதி அயோத்திக்கு பயணம் செய்கிறார்.

நேற்று முன்தினம் டெல்லி சென்ற உத்தவ் தாக்கரே பாஜக மூத்த தலைவரான அத்வானி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியையும் சந்தித்து உள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்!

0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக மறுத்த ரஜினியை சீமான் டிவிட்டரில் கேலி செய்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நட்ந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ கலவரம் குறித்து பேசிய ரஜினிகாந்த் இந்த ’துப்பாக்கிச் சூடு சம்பவம் சமூக விரோதிகளால் ஏற்பட்டது. கூட்டத்துக்குள் சமுக விரோதிகள் புகுந்துவிட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது’ எனக் கூறினார். ரஜினியின் இந்த பேச்சு சர்ச்சைகளை உருவாக்கியதை அடுத்து சமூக விரோதிகள் என்று யாரை ரஜினிகாந்த் குறிப்பிட்டார் என்பதை அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என சீமான் உள்ளிட்டோர் எழுப்பிய கோரிக்கைகளை அடுத்தே விசாரணை கமிஷன் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  

விசாரணையை மேற்கொண்டு வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினியை அழைத்து விசாரணை செய்ய சம்மன் அனுப்பியது.இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு ஒன்று கமிஷனிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கேட்க வேண்டிய கேள்விகளை எழுத்துப்பூர்வமாக தன்னிடம் கேட்டால் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயார். நான் அங்கு வந்தால் ரசிகர்கள் கூட்டம் கூடி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த பதிலைக் கேலி செய்யும் பதிலளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்’ என்று சொல்ல தூத்துக்குடி சென்றபோது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுகிறதா? ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு சீர்குலையுமென்றால், உங்கள் ரசிகர்கள் யார்?…. இது எப்டி இருக்கு?! ’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

படப்பிடிப்புக்குத் தயாரான வெற்றிமாறன்! முழுப்படமும் வெளிநாட்டில்?

0

படப்பிடிப்புக்குத் தயாரான வெற்றிமாறன்! முழுப்படமும் வெளிநாட்டில்?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் முழுப்படப்பிடிப்பும் கதார் நாட்டில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனது நண்பர் தனுஷோடு மட்டுமே கூட்டணி அமைத்து படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவர்கள் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதையடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வமாக இருக்கிறார். இந்த படத்தை தாணு தயாரிக்க, ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் தமிழின் முக்கியமான நாவலான வாடிவாசலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக வெற்றிமாறன் சூரியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை விண்ணைத்தாண்டி வருவாயா, கோ ஆகிய படங்களை தயாரித்த ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் தயாரிக்க இருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க இருக்கிறது. வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைக்கும் தமிழர்களின் துயர வாழ்வை சொல்லும் படமாக உருவாக இருக்கிறது. வெற்றிமாறன் இந்த படத்தை அஜ்னபி என்ற நாவலை மையப்படுத்தி உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக தமிழர்கள் பிழைப்புக்காக அதிகமாக செல்லும் நாடான கத்தாரில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன்.

இதற்கான விசா பெறும் பணிகளை இப்போது தயாரிப்பு நிறுவனம் செய்து வருகிறது. விசா கிடைத்தவுடன் படக்குழுவினர் கதார் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.