கொரோனா வைரஸ் எதிரொலி – வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு டுவிட்டர் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு டுவிட்டர் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் பரவி உள்ளது. அமெரிக்காவிலும் கொரோனா வைரசுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 2 பேர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்ற நாடுகளைப் போல், அமெரிக்காவும் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரின் தலைமை அலுவலகம் கொரோனா வைரஸ் … Read more

பால்,தயிர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு பரிசீலனை…

பால், தயிர், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க பரிசீலித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் டீ கப் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், தொடர்ந்த வழங்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆஷா … Read more

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!! பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒட்டுமொத்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடங்களுடன் தொடங்குகிறது. இந்த பொதுத்தேர்வில் 8,32,000 பேர் எழுதுகின்றனர். ஒட்டுமொத்தமாக 3016 தேர்வு மையங்கள் சரியான விதிமுறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகள் நடவாமல் இருக்க 4000 பறக்கும்படையினர், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் சிறப்பு தனிப்படை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைக்குள் செல்போன் மற்றும் தேர்வுக்கு சம்பந்தமில்லாத … Read more

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!!

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!! விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கி வரச்சொல்லி வேலை வாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி கிராமத்தில் நடக்கும் தினசரி நிகழ்வு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பந்தல்குடியில் இயங்கிவரும் தெற்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு டீ, வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை அங்கு படிக்கும் … Read more

ஒரு மணி நேரத்தில் என் தவறை புரிந்து கொண்டேன்! இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்! மன்னிப்பு கேட்ட சீமானின் தம்பி!

ஒரு மணி நேரத்தில் என் தவறை புரிந்து கொண்டேன்! இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்! மன்னிப்பு கேட்ட சீமானின் தம்பி!

நடைபயிற்சி சென்றபோது அமைச்சரின் செல்போனை திருடிய புள்ளீங்கோ! பாதுகாப்பு அதிகாரி இருந்தும் பாதுகாப்பு இல்லை!!

நடைபயிற்சி சென்றபோது அமைச்சரின் செல்போனை திருடிய புள்ளீங்கோ! பாதுகாப்பு அதிகாரி இருந்தும் பாதுகாப்பு இல்லை!! புதுச்சேரி கடற்கரை சாலையில் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் வாக்கிங் சென்ற அமைச்சரின் செல்போனை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் உடல் ஆரோக்கியத்திற்காக இரவு நேரங்களில் வாக்கிங் செய்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல இரவு நடைபயிற்சியை முடித்துவிட்டு தனது பாதுகாப்பு அதிகாரியுடன் வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். திடீரென அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியின் கையில் இருந்த செல்போனை இருசக்கர … Read more

சென்னை தேனாம்பேட்டையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு!

சென்னை தேனாம்பேட்டையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு! சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து வீசிய வெடிகுண்டு உடனே பலத்த சத்தத்துடன் வெடித்தது. இந்த பாலத்தின் அருகே வியாபார நிறுவனங்களும், பூங்காவும், ஓட்டல்களும் பல்வேறு அலுவலக கட்டிடங்களும் உள்ளன. ஜெமினி பாலத்தின் கீழ் அல்லது மேல் பகுதியில் எப்போதும் போக்குவரத்து காவல்துறையினர் எப்போதும் இருப்பார்கள். இந்த … Read more

கல்லூரி மாணவிகள் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட டிக்-டாக் வீடியோவை வைத்து மிரட்டி வாலிபர் செய்த காரியம்

Youth-arrested-for-fake tik-tok-video-showing with college-students

கல்லூரி மாணவிகள் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட டிக்-டாக் வீடியோவை வைத்து மிரட்டி வாலிபர் செய்த காரியம் தென்காசி மாவட்டதிலுள்ள சுரண்டை அருகேயுள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் தான் செல்வராஜ். இவரது 19 வயதுடைய மகன் கண்ணன் என்பவர் 9 ஆம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். இவர் காதல் மன்னன் என்ற பெயரில் டிக்-டாக்கில் பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இதுவரை சுமார் ஏறக்குறைய 1,000 வீடியோக்களுக்கு மேல் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் இவரை டிக் … Read more

ஏணி சின்னத்துல ஒரு குத்து; தென்னமர சின்னத்துல ஒரு குத்து! ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்! வைரலாகும் வீடியோ!

ஏணி சின்னத்துல ஒரு குத்து; தென்னமர சின்னத்துல ஒரு குத்து! ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்! வைரலாகும் வீடியோ! உத்திர பிரதேச இளைஞர் ஒருவர் தான் காதலித்த இரண்டு பெண்களுக்கும் தாலிகட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. வட மாநிலங்களில் புதுப்புது சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஒரு இளைஞர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை ஏமாற்றுவதாக கூறி இரண்டு பெண்களும் இளைஞருடன் சண்டையிட்டுள்ளனர். … Read more

கொரோனா வைரஸ் பற்றி அச்சப்பட வேண்டாம்! பெண்களிடம் ஒப்படைக்க நினைக்கிறேன்! மோடி பேச்சு!

கொரோனா வைரஸ் பற்றி அச்சப்பட வேண்டாம்! பெண்களிடம் ஒப்படைக்க நினைக்கிறேன்! மோடி பேச்சு! கொரோனா வைரஸ் தொற்றினை பற்றி யாரும் கவலைப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீனாவின் உருவான கொரோனா என்னும் தொற்றுக் கிருமியால் இதுவரை 3000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். தற்போது சீனாவின் அண்டை நாடுகளுக்கும் வைரஸ் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியா, தென்கொரியா போன்ற சீனாவின் அண்டை அனைத்தும் வைரஸால் பயந்து நடுங்கியுள்ளன் இந்நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கும், … Read more