தோனி ஓய்வு குறித்து தோனி தான் கூற வேண்டும்! சிஎஸ்கே பயிற்சியாளர் கருத்து!!

0
185
#image_title
தோனி ஓய்வு குறித்து தோனி தான் கூற வேண்டும்! சிஎஸ்கே பயிற்சியாளர் கருத்து!
தற்போது உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி அவர்களின் ஓய்வு குறித்து அவர்தான் கூற வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் மைகேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று நடக்கும் தனது கடைசி லீக் ஆட்டமான டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.
இதையடுத்து ஐபிஎல் தொடரை விட அதிகமாக பேசப்படுவது சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் ஓய்வு குறித்துதான். இது குறித்து ஒரு போட்டியில் தோனியிடம் கேட்கப்பட்டப் பொழுது இது தான் என்னுடைய கடைசி ஐபிஎல் தொடர் என்று நீங்கள் முடிவு செய்து வீட்டீர்கள் ஆனால் நான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார். இதை வைத்து மகேந்திர சிங் தோனி அவர்கள் அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் மைகேல் ஹஸ்ஸி அவர்கள் தோனி அவர்களின் ஓய்வு குறித்து பேசியுள்ளார். பயிற்சியாளர் மைகேல் ஹஸ்ஸி அவர்கள் “தோனி அவர்களின் ஓய்வு பற்றி அவருக்குத்தான் தெரியும். அவர்தான் முடிவு செய்ய வேண்டும். தோனி அவரது ஓய்வு குறித்து யாரிடமும் பேசவில்லை. இதுதான் அவரது கடைசி ஐபிஎல் சீசனா என்பதும் எங்களுக்கும் தெரியவில்லை. ஆனால் தோனி அவர்களுக்கு இருக்கும் உடல் தகுதிக்கு இன்னும் 5 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடலாம். இருந்தாலும் ஓய்வு குறித்து தோனி கூறினால் தான் எதுவும் முடிவு செய்ய முடியும்” என்று கூறினார்.