மாற்றுத்திறனாளிகளுக்கு இனி இதிலிருந்து விலக்கு! அதிரடியாக உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!!

0
123

மாற்றுத்திறனாளிகளுக்கு இனி இதிலிருந்து விலக்கு! அதிரடியாக உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!!

 

மாற்றுத்திறனாளிகள் வாங்கும் வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.

 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த காருனியா சீலாவதி தாக்கல் செய்த மனுவின் விசாரனை முடிவில் உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

இது தொடர்பாக மாற்றுத்திறனாளி காருனியா சீலாவதி அவர்கள் தாக்கல் செய்த மனுவில் “நான் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. என்னிடம் உடல் ஊனத்தின் தன்மை 100 சதவீதம் என்பதற்கான  மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும்  சான்றிதலும் உள்ளது. எனது சொந்த பயணங்களுக்காக அடுத்தவர்களை நான் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. ஆட்டோ மற்றும் டேக்சியில் சென்று வருவது மிகவும் சிரமமாக உள்ளது.

 

நான் எனது சொந்த தேவைக்காக கார் ஒன்று வாங்கவுள்ளேன். மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக வடிவமைக்கப்படும் வாகனங்களை வாங்குவதற்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று 1976ம்ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

 

அதை அடிப்படையாகக் கொண்டு வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி திருநெல்வேலி மண்டல போக்குவரத்து அதிகாரியிடம் விண்ணப்பித்தேன். ஆனால் மண்டல போக்குவரத்து அதிகாரி எனதா விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார்.

 

இதையடுத்து நான் ஜி.எஸ்.டியில் இருந்து வரிவிலக்கு கோரி  மத்திய கனரக தொழில்கள்துறை சார்பு செயலர் அவர்களும் எனது விண்ணப்பத்தை நிராகரித்தார். இரண்டு பேருடைய உத்தரவுகளையும் ரத்து செய்து நிராகரித்த விண்ணப்பத்தை ஏற்று வரிவிலக்கு தரவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி ஆஷா அவர்கள் “மனுவை வழங்கிய காருணியா சீலாவதி அவர்கள் மாற்றுத்திறனாளி என்பதை மத்திய அரசோ மாநில அரசோ மறுக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான டில்லி கமிஷ்னர் அவர்கள் அவர்கள் ‘100 சதவீதம் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் தனியாக சாலையில் வாகனங்களை ஓட்டக்கூடாது. இந்த நபர்களுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு, சுங்கவரி விலக்கு, சாலை வரி விலக்கு ஆகிய சலுகைகளை அளிக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்தார்.

 

பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத் துறைகளில் பணிகள் வழங்கப்படுகின்றது. அவர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். அதை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கருதுகின்றது.

 

மண்டல போக்குவரத்து அதிகாரியும், கனரக தொழில்கள் துறை சார்பு செயலர் அவர்களும் நிராகரித்த உத்தரவு ரத்து செய்யபடுகின்றது. மோட்டார் வாகன வரி மற்றும் ஜி.எஸ்.டியில் இருந்து மனுதாரருக்கு விலக்கு அளிக்கபடும் என்பதை உறுதி செய்து  அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று நீதிபதி பி.டி ஆஷா அவர்கள் கூறியுள்ளார்.