ஆஸ்திரியா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து! மூன்று நோயாளிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

ஆஸ்திரியா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து! மூன்று நோயாளிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

ஆஸ்திரியாவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகள் மூன்று பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் தலைநகர் வியன்னாவிற்கு அருகில் உள்ள மோட்லிங் நகரில் பியபல மருத்துவமனை ஒன்று உள்ளது. நோயாளிகள் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மருத்துவமனை இது.

இந்த மருத்துவமனையில் நள்ளிரவு 1 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் பிடித்த தீ கட்டிடம் முழுவதும் பரத் தொடங்கியதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90க்கும் மேற்பட்ட நோயாளிகளை அங்கிருந்து  பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மருத்துவ மனையில் பரவிய தீயை போராடி கட்டுப்படுத்தினர். எதிர்பாராத விதமாக இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளில் 3 பேர் விபத்தில் சிக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.