இது தெரிந்தால் இனிமேல் முட்டை ஓட்டை தூக்கிப்போட மாட்டீங்க!! கால்சியம் சத்தை அதிகரிக்க இதை சாப்பிடுங்க!!

Photo of author

By Divya

இது தெரிந்தால் இனிமேல் முட்டை ஓட்டை தூக்கிப்போட மாட்டீங்க!! கால்சியம் சத்தை அதிகரிக்க இதை சாப்பிடுங்க!!

Divya

நம்மில் பலரும் விரும்பி உட்கொள்ளும் விருப்பமான உணவுப் பொருளாக முட்டை உள்ளது.இந்த முட்டையில் ஊட்டச்சத்துக்கு பஞ்சமே இல்லை.தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்களே கூறும் அளவிற்கு இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்திருக்கிறது.

முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

1)கால்சியம்
2)புரதம்
3)மெக்னீசியம்
4)ப்ளுரைட்
5)செலினியம்

இன்றுவரை நாம் முட்டையை வேகவைத்த பிறகு அதன் ஓடுகளை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தான் உட்கொண்டு வருகின்றோம்.ஆனால் முட்டையை கருவை விட அதன் ஓடுகளில் தான் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.1 கிராம் அளவுள்ள முட்டை ஓட்டில் சுமார் நானுறு மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் சத்து நிறைந்துள்ளன.

உடல் எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது.முட்டை ஓடுகளை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம்.பால் பிடிக்காதவர்கள் முட்டை ஓட்டின் மூலம் தேவையான கால்சியத்தை பெற முடியும்.

முட்டை ஓட்டுத் தூளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் எலும்புகள் பலவீனமாவது கட்டுப்படும்.முட்டை ஓட்டு தூளை தினசரி எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

முட்டை ஓட்டை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் பெரிய சருமத் துளைகள் குறையும்.முதுமையை தள்ளிப்போட முட்டை ஓடு பேஸ் பேக் பயன்படுத்தலாம்.சரும அலர்ஜியை போக்கும் தன்மை முட்டை ஓட்டில் இருக்கிறது.கரும்புள்ளிகள்,சுருக்கங்கள் மறைய முட்டை ஓட்டை பயன்படுத்தலாம்.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்க முட்டை ஓட்டை பொடித்து பற்பொடி போன்று உபயோகிக்கலாம்.பல் ஈறுகளை வலிமையாக வைத்துக் கொள்ள முட்டை ஓடு பயன்படுத்தலாம்.

முட்டை ஓடு பயன்படுத்தும் முறை:

சுத்தமான முட்டை ஓடுகளை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.முட்டை ஓட்டில் காணப்படும் ஜவ்வு போன்ற லேயர்களை நீக்கிவிட வேண்டும்.பிறகு முட்டை ஓட்டை சூடான நீரில் போட்டு நன்றாக கழுவி வெயிலில் நன்கு காயவைத்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஜல்லடை கொண்டு முட்டை ஓட்டுத் தூளை சலித்துக் கொள்ள வேண்டும்.இந்த தூளை ஒரு ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கால் தேக்கரண்டி முட்டை தூள் சேர்த்து பருக வேண்டும்.