தொடர் இருமல் காச நோய்க்கான அறிகுறியா? அடேங்கப்பா இருமலில் இத்தனை வகை இருக்கா?

Photo of author

By Divya

தொடர் இருமல் காச நோய்க்கான அறிகுறியா? அடேங்கப்பா இருமலில் இத்தனை வகை இருக்கா?

Divya

உடல் நல பாதிப்பில் ஒரு அங்கம் தான் இருமல்.காய்ச்சல்,சளி போன்ற பாதிப்புகள் ஏற்படும் பொழுது இருமல் பிரச்சனை இருக்கும்.இது மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒரு பொதுவான பாதிப்பு தான்.

சிலருக்கு இருமல் பாதிப்பு சில தினங்களில் குணமாகிவிடும்.சிலருக்கு இருமல் குணமாக வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும்.தொடர்ந்து இருமல் இருந்தால் ஏதேனும் நோய் பாதிப்பு வந்துவிட்டது என்று சிலர் அஞ்சுகின்றனர்.

தொண்டை அல்லது சுவாசக் பாதையில் கிருமி தொற்றுகள் இருந்தால் இருமல் வரும்.இந்த இருமல் பாதிப்பு எவ்வளவு நாட்கள் நீடிக்கிறது என்பதை பொறுத்து அதை வகைப்படுத்தலாம்.

வறட்டு இருமல்,கடும் இருமல்,கட்டுப்படுத்த இருமல்,சளியுடன் கூடிய இருமல்,காய்ச்சலுடன் கூடிய இருமல்,காய்ச்சல் இல்லாத இருமல்,நாள்பட்ட இருமல் என்று இருமலில் பல வகைகள் இருக்கிறது.

ஆஸ்துமா,காசநோய்,சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறியாக இருப்பது இருமல் தான்.உங்களுக்கு காய்ச்சல் இல்லாமல் வெறும் தொடர் இருமல் பிரச்சனை இருந்தால் அது ஆஸ்துமா பாதிப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம்.

அதுவே காய்ச்சல் இருந்து மாதங்கள் கடந்தும் தொடர்ந்து இருமல் மட்டும் வருகிறது என்றால் அது காசநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.சிலருக்கு சளியுடன் தொடர் இருமல் பிரச்சனை இருக்கும்.இது சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனையாக இருக்கலாம்.

நாள்பட்ட இருமல் பாதிப்பு என்பது நுரையீரல் நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.இந்த இருமலின் போது உடல் சோர்வு,தூக்கமின்மை,மனசோர்வு போன்றவை ஏற்படும்.இந்த இருமல் பாதிப்பு குறைந்தது 8 வாரங்கள் வரை நீடிக்கும்.

கடுமையான இருமல் பாதிப்பு வைரஸ் தொற்றுக்கான அறிகுறியாகும்.இந்த இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும்.சிலருக்கு சளியுடன் கூடிய தொடர் இருமல் பிரச்சனை இருக்கும்.இது நெஞ்சு சளி,நிமோனியா,ஒவ்வாமை,காய்ச்சல் போன்றவற்றிற்கான அறிகுறியாக இருக்கலாம்.

இருமலில் மிகவும் ஆபத்தானவை இந்த கக்குவான் இருமல்.இது காசநோய்,ஆஸ்துமா அடைப்பு,நிமோனியா,நுரையீரல் நோய்க்கான அறிகுறியாகும்.இதற்கு உடனடி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.சிலருக்கு தொண்டை எரிச்சலுடன் கூடிய இருமல் பிரச்சனை இருக்கும்.இது எதிர்க்களித்தல் அல்லது நெஞ்செரிச்சலுக்கான அறிகுறியாகும்.இருமல் தன்மையை பொறுத்து மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.