கேரளா ஸ்டைல் தயிர் சாதம் – மணக்கும் சுவையில் எப்படி?

0
136
#image_title

கேரளா ஸ்டைல் தயிர் சாதம் – மணக்கும் சுவையில் எப்படி?

தயிர் சாதம் உங்களில் பலருக்கு விருப்ப உணவாக இருக்கலாம். கெட்டி தயிர் கொண்டு வாயில் போட்டதும் கரைந்தோடும் சுவையில் கேரளா ஸ்டைல் தயிர் சாதம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவைப்படும் பொருட்கள்

நன்கு வேக வைத்த சாதம் – 1 கப்
கெட்டி தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2(நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கைப்பிடி

தயிர் சாதம் செய்யும் முறை…

ஒரு கப் நன்கு வேக வைத்த சாதம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அடுத்து அதில் புளிக்காத கெட்டி தயிர் 1 கப் அளவு சேர்த்து ஒரு கிளறு கிளறி விடவும்.

அடுத்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து நன்கு குழையும் படி கிளறி வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் 1 தேக்கரண்டி உளுந்து பருப்பு, 1 தேக்கரண்டி கடலை பருப்பு சேர்த்து பொரிய விடவும்.

பிறகு 1 தேக்கரண்டி கடுகு, 1 கொத்து கருவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தயிர் சாதத்தில் போட்டு கிளறவும். வாசனைக்காக சிறிது நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து கிளறிவிட்டால் கேரளா ஸ்டைலில் மண மணக்கும் தயிர் சாதம் தயார்.