2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி யும் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என கூறியுள்ளார். அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் கட்டாயம் கூட்டணி முறையிலேயே ஆட்சி என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் வந்ததது. ஆனால் இவ்வாறான தகவல் பொய்யானது என தவெக சார்பாக உடனடியாக அறிவிக்கப்பட்டது. அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கிடையாது என்பது திட்டவட்டமாகத் தெரிவித்தது போல் இருந்தது.
இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விஜய் பெரியார் நினைவு நாளன்று அவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார். அதேபோல் வேலுநாச்சியார் நினைவு நாளிலும் உபசரணை செய்யப்பட்டது. ஆனால் எம்ஜிஆர் நினைவு நாளை மட்டும் அவர் கண்டு கொள்ளவில்லை. இது அதிமுக-வை முற்றிலும் ஒதுக்குவது போல் உள்ளது. அரசியல் ரீதியாக நினைவு நாளை உபசரிக்காமல் இருந்திருந்தாலும், சினிமா துறையில் எம்ஜிஆர் புரட்சியை ஏற்படுத்தியவர்.
அவ்வாறு இருக்கையில் தனது மாநாட்டில் மட்டும் விஜய், இவரை சுட்டிக்காட்டி எம்ஜிஆர் அவர்களும் சினிமாவிலிருந்து தான் வந்தார், கூத்தாடிகள் என்று சொல்வது சரிதானா என கேட்டிருப்பார். அதனடிப்படையில் கூட விஜய் மரியாதை செலுத்த விரும்பவில்லை. இதுவே கூட்டணியிலிருந்து விலகிய பாஜக அண்ணாமலைக் கூட எம்ஜி ஆர் நினைவு தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் விஜய் இது குறித்து பேசாதது அதிமுக-வுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக உள்ளது.