இனி எந்த எண்ணெய்யும் தடவ தேவையில்லை.. அடர்த்தியான நீளமான முடி வளர்ச்சிக்கு இந்த பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்!!

0
200
No need to apply any oil anymore.. Just eat these fruits for thick long hair growth!!
No need to apply any oil anymore.. Just eat these fruits for thick long hair growth!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடி அடர்த்தியாகவும்,நீளமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் இன்றைய காலத்தில் மோசமான முடி உதிர்வு பிரச்சனையை பலர் சந்தித்து வருகின்றனர்.

முதிய வயதில் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட்ட காலம் போய் தற்பொழுது சிறுவர்கள்,இளம் தலைமுறையினர் முடி கொட்டல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

முடி உதிர்தல் ஏற்படக் காரணம்:

1)ஊட்டச்சத்து குறைபாடு
2)தலை முடி வறட்சி
3)மன அழுத்தம்
4)பொடுகு
5)முறையான பராமரிப்பு இன்மை

கூந்தல் வளர்ச்சிக்கு கண்ட கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கியம் நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள்.இயற்கையாக முடி வளர்ச்சி அதிகரிக்க பழங்கள் சாப்பிடுவது சிறந்த தீர்வாக விளங்குகிறது.

1)மாதுளை

இந்த பழத்தின் சாற்றை உட்கொள்வதால் முடி கொட்டல் பிரச்சனை நீங்கி அதன் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கும்.அது மட்டுமின்றி மாதுளை விதை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எண்ணையை தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

2)அன்னாசிப் பழம்

தினமும் ஒரு கீற்று அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனை நீங்கி அடர்த்தியான கருமையான முடி வளரும்.

3)பப்பாளி பழம்

உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்ற பப்பாளி பழம் பெரிதும் உதவுகிறது.இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.முடி வறட்சி,முடி வெடிப்பு பிரச்சனையை சரி செய்ய பப்பாளி பழத்தை தலைக்கு அப்ளை செய்யலாம்.

4)​ஸ்ட்ராபெர்ரி

தலையில் இருக்கின்ற பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுத்து ஆரோக்கியமான முடி வளர்ச்சி பெற ஸ்ட்ராபெர்ரியை உட்கொள்ளலாம்.இதில் அதிகளவு தாமிரம்,மாங்கனீசு,மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கிறது.இந்த ஸ்ட்ராபெர்ரி பழம் அடர்த்தியான நீளமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

5)ஆப்பிள்

நீங்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் முதல் இடத்தில் இருப்பது ஆப்பிள்.இது ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும்.இந்த பழம் முடி உதிர்தலை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

Previous articleமூட்டு ஜவ்வு தேய்மானம் ஆகிவிட்டதா? இந்த மூலிகை மருந்தை அங்கு அப்ளை செய்தால் ஆயுசுக்கும் இனி பிரச்சனை வராது!!
Next articleசர்க்கரை நோய்க்கு அருமருந்து இந்த ஒரு இலை!! பொடி செய்து சாப்பிட்டால் மாத்திரையே இனி தேவையில்லை!!