ஒரு பைசா செலவு செய்ய தேவையில்லை!! 1 வெங்காயம் போதும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க!!

0
138
#image_title

ஒரு பைசா செலவு செய்ய தேவையில்லை!! 1 வெங்காயம் போதும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க!!

இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வெங்காயம் மிகச் சிறந்த முறையில் மருந்தாக பயன்படுகிறது. மேலும் வெங்காயம் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. இந்த வெங்காயத்தில் இருக்கும் பல சத்துக்களை பற்றியும் வெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

 

இந்திய சமையலில் வெங்காயம் என்பது இன்றியமையாத ஒன்று. வெங்காயம் இல்லாத இந்திய சமையலே இருக்காது. இந்த வெங்காயத்தில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் ஒரு சிலர் இதன் சுவை காரணமாக உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. இன்னும் ஒரு சிலர் உணவில் வெங்காயம் இருந்தால் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.

 

வெங்காயத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.

 

வெங்காயத்தில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்டுகளும் ஃபிளவனாய்டுகளும் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

 

வெங்காயத்தின் வகைகள்…

 

வெங்காயம் உலகம் முழுவதும் பல வகைகளில் கிடைக்கின்றது. வெள்ளை வெங்காயம், மஞ்சள் வெங்காயம், சிவப்பு வெங்காயம், இனிப்பு வெங்காயம் என்று பல வகைகள் உள்ளது. இந்தியாவில் சிவப்பு மற்றும் வெள்ளை வெங்காயம் அதிக அளவில் கிடைக்கின்றது.

 

வெங்காயத்தில் உள்ள சத்துக்கள்…

 

நார்ச்சத்துக்கள் நிறைந்த வெங்காயம்…

 

வெங்காயம் நம் குடலுக்கு நன்மை செய்யக் கூடிய பாக்டீரியாக்களை வளர்க்கும் தன்மை கொண்டது. குறிப்பாக வெங்காயத்தில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் அதிக அளவு உள்ளது. இந்த வெங்காயத்தில் பிரக்டான்கள் எனப்படும் மூலக்கூறும் அதிக அளவு உள்ளது.

 

நார்ச்சத்துக்கள் நமக்கு கிடைக்ககூடிய வெங்காயத்தில் அதிக அளவு உள்ளது. வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை குணப்படுத்தும். மேலும் வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும். வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உணவு மூலக்கூறுகளை உடைத்து செரிமானத்தை சீராக்க உதவுகின்றது. சர்க்கரை நோயாளிகள் வெங்காயத்தை அதிக அளவு உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்தத்தில் கார்போஹைட்ரேட்டுகளை வெளியிடுவது மெதுவாகி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கும்.

 

வெங்காயத்தில் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு…

 

வெங்காயத்தில் இருக்கும் கிளைசெமிக் குறியீடு நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சர்க்கரை எவ்வளவு மெதுவாக ரத்தத்தில் கலக்கிறது என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

 

வெங்காயத்தில் குறைந்த அளவே கிளைசெமிக் குறியீடு உள்ளது. வெங்காயத்தின் கிளைசெமிக் குறியீடு வெறும் 10 தான். வெங்காயத்தில் குறைந்த அளவே கிளைசெமிக் குறியீடு இருப்பதால் இது ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடுகின்றது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

 

குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ள வெங்காயம்…

 

வெங்காயத்தில் கார்போஹைட்ரேட் அளவு குறைந்த அளவே உள்ளது. வெங்காயத்தில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ளதால் இது ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. வெங்காயத்தில் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் சத்துக்கள் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுவதுடன் உடல் எடை குறையவும் செய்கிறது.

 

வெங்காயத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்டுகள்…

 

வெங்காயத்தில் கிட்டத்தட்ட 17 வகையான ஃபிளவனாய்டுகள் உள்ளது. மேலும் ஆக்சிஜனேற்றச் சத்துக்களும் செறிவாக உள்ளது. இந்த ஃபிளவனாய்டுகளில் குர்செடின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிக அளவு உள்ளது. இந்த சத்துக்கள் நீரிழிவுக்கான அறிகுறிகளை குறைக்க உதவுகின்றது. சிவப்பு வெங்காயத்தில் அந்தோசயினின்கள் அதிக அளவு இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது.

 

வெங்காயத்தை எப்படி உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்….

 

* நம்முடைய எல்லா சமையலிலும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தை உடைய நாம் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொள்வது நல்லது.

 

* ஒவ்வொரு வேளை உணவுகளை சாப்பிட்ட பிறகும் ஒரு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் பொழுது ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

 

* வெங்காயத்தை சாலட்டில் அதிகளவு சேர்த்து சாப்பிடலாம்.

 

* வெங்காயத்தின் சாறினை எலுமிச்சை சாறுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

 

* காய்கறிகளை பொரியலாக சமைக்கும் பொழுது அதில் வெங்காயத்தை சேர்த்து முழுமையாக வேக வைக்காமல் பாதி அளவு வேகவைத்து சாப்பிடலாம்.

 

இது போல வெங்காயத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது அதிகப்படியான சர்க்கரை கட்டுக்குள் வருவதோடு நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.