Saturday, July 5, 2025
Home Blog Page 12

எல்லாவிதமான காய்ச்சலும் தீர இந்த 6 பொருள் போதும்!

0

பனிக் காலம் வந்துவிட்டது. இந்த பனிக்காலத்தில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சரி சளி பிடித்தல் மற்றும் காய்ச்சல் இருமல் ஆகிய பிரச்சனை கூடவே வந்துவிடும்.

காய்ச்சலும் இருமலும் தீர டாக்டரிடம் சென்று செலவு செய்யாமல் வீட்டிலேயே இந்த ஆறு பொருட்கள் இருந்தால் எந்த விதமான காய்ச்சலையும் நொடியில் போக்கிவிடும் பானத்தை நீங்களே தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
1. மிளகு -10
2. துளசி இலை -ஒரு கைப்பிடி
3. சுக்கு- ஒரு துண்டு
4. திப்பிலி- 3
5. தனியா- 50 கிராம்
6. பனை வெல்லம்- தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் ஒரு சிறிய உரலை எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் மிளகு, துளசி, சுக்கு, திப்பிலி, தனியா ஆகியவற்றை சேர்த்து நன்றாக தட்டி கொள்ளவும்.
3. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
4. அந்த தண்ணீரில் தட்டி வைத்த பொருட்களை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
5. 5 நிமிடம் நன்கு கொதித்ததும் பனை வெல்லத்தை சுவைக்கேற்ப தேவையான அளவு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
6. நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.
7. இதனை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை 100 மில்லி அளவில் சாப்பிட்டு வர எந்த விதமான காய்ச்சலும் அண்டாது.
8. இந்த முறைப்படி நீங்கள் இந்த பானத்தை அருந்துவது காய்ச்சலும்‌,சளியும் உடனடியாக தீரும்.

சளி மூக்கடைப்பு நீங்க,மூக்கடைப்பு நீங்க முத்திரை,சளியை வெளியேற்ற,சளி இருமல் ஜலதோஷம்,சைனஸ் கோளாறை விரட்ட எளிய வழிகள்,ஜலதோஷம் என்றால் என்ன,சளி தும்மல் குணமாக,சைனஸ் மூக்கடைப்பு,சளி மாத்திரை பெயர்,அலர்ஜி சளி அறிகுறிகள்,மூக்கில் வாசனை இல்லை,முகத்தில் சளி,சளி நீங்க,மூக்கில் சதை வளர்ச்சி அறிகுறிகள்,சளி பொடி,சளி கடுகு இலை,சளிக்கு ஏற்ற உணவு,மூக்கு அடைப்பு சரி செய்ய,மூக்கடைப்பு meaning in english,மூக்கில் சதை வளர்தல் அறிகுறிகள்,மூக்கு சதை வளர்ச்சிக்கு மருந்து,அலர்ஜி தும்மல் பாட்டி வைத்தியம்,மண்ட சளி,குழந்தைகளுக்கு ஜலதோஷம்,சளிக்கு யோகா,தடிமன் நீங்க,Jalathosam maruthuva kurippu,அலர்ஜி இருமல் மருத்துவம்,அடிக்கடி ஜலதோஷம்,தலைவலி மூக்கடைப்பு,தடிமன் குணமாக,சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்,தொண்டை சளி காரணம்,தொண்டை சளியை வெளியேற்ற,தலையில் சளி அறிகுறிகள்,சளி நிறம்,சளி குணமாக,சளிக்கு ஏற்ற பழங்கள்,மூக்கடைப்பு நீங்க முத்திரை,சளியை வெளியேற்ற,சளி இருமல் ஜலதோஷம்,சைனஸ் கோளாறை விரட்ட எளிய வழிகள்,ஜலதோஷம் என்றால் என்ன,சளி தும்மல் குணமாக,சைனஸ் மூக்கடைப்பு,சளி மாத்திரை பெயர்,அலர்ஜி சளி அறிகுறிகள்,மூக்கில் வாசனை இல்லை,முகத்தில் சளி,சளி நீங்க,மூக்கில் சதை வளர்ச்சி அறிகுறிகள்,மூக்கு அடைப்பு சரி செய்ய,மூக்கடைப்பு meaning in english,மூக்கில் சதை வளர்தல் அறிகுறிகள்,சளி பொடி,சளி கடுகு இலை,சளிக்கு ஏற்ற உணவு,உடம்பில் உள்ள சளி வெளியேற,உடல் சூட்டினால் ஏற்படும் சளி,தொண்டை சளியை வெளியேற்ற,நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றுவது எப்படி,குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்க காரணம்,Irumal and sali,சளிக்கு யோகா,சளித்தொல்லை,நெஞ்சு சளி இருமல் குணமாக,சளி இருமல் in english,தொண்டை சளி காரணம்,தலையில் சளி அறிகுறிகள்,சளி நிறம்,சளி குணமாக,சளிக்கு ஏற்ற பழங்கள்,நெஞ்சு சளி அறிகுறிகள்,நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற,குழந்தைக்கு நெஞ்சு சளி இருமல் குணமாக,தொண்டை சளி நீங்க,கோழை சளி நீங்க,சளியை வெளியேற்றுவது எப்படி,தலையில் உள்ள சளியை வெளியேற்ற,குழந்தைகளுக்கு சளியை வெளியேற்ற,சளிக்கு நாட்டு மருந்து,சளி in english,காய்ச்சல் குணமாக,காய்ச்சல் குணமாக முத்திரை,உள் காய்ச்சல் அறிகுறிகள்,குளிர் காய்ச்சல் அறிகுறிகள்,1 வயது குழந்தைக்கு காய்ச்சல் குணமாக,குளிர் காய்ச்சல் in english word,டைபாய்டு காய்ச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும்,குளிர் நடுக்கம் குறைய,சளி இருமல் காய்ச்சல் குணமாக,உடல் வலி குணமாக,உடல் வலி தீர பாட்டி வைத்தியம்,உடல் வலியை குறைக்கும் சிறந்த உணவுகள்,சளி இருமல் குணமாக,நாள்பட்ட சளி இருமல்,சளி மூக்கடைப்பு நீங்க,சளி in english,குழந்தைக்கு விட்டு விட்டு காய்ச்சல்,குழந்தைக்கு காய்ச்சல் உணவு,காய்ச்சல் வந்தால் என்ன செய்வது,குழந்தைக்கு தலை சூடு குறைய,குழந்தைக்கு காய்ச்சல் அளவு,காய்ச்சல் தீர மந்திரம்,சளி ஜுரம்,காய்ச்சல் மாத்திரை,காய்ச்சல் கை கால் வலி,காய்ச்சல் உணவு முறை,டெங்கு காய்ச்சலுக்கு என்ன மருந்து,காய்ச்சல் குணமாக முத்திரை,உள் காய்ச்சல் அறிகுறிகள்,குளிர் காய்ச்சல் அறிகுறிகள்,1 வயது குழந்தைக்கு காய்ச்சல் குணமாக,குளிர் காய்ச்சல் in english word,டைபாய்டு காய்ச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும்,சளி இருமல் குணமாக,நாள்பட்ட சளி இருமல்,சளி மூக்கடைப்பு நீங்க,சளி in english,குளிர் நடுக்கம் குறைய,குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வர காரணம்,Fever kunamaga,காய்ச்சல் தீர மந்திரம்,காய்ச்சல் குணமாக இயற்கை மருத்துவம்,குளிர் காய்ச்சல் காரணம்,டைபாய்டு காய்ச்சல் குறைய என்ன செய்ய வேண்டும்,காய்ச்சல் மாத்திரை,காய்ச்சல் கை கால் வலி,காய்ச்சல் உணவு முறை,டெங்கு காய்ச்சலுக்கு என்ன மருந்து,குழந்தைக்கு காய்ச்சல் உணவு,குழந்தைக்கு காய்ச்சல் அளவு,சளி ஜுரம்,குளிர் காய்ச்சல் in english,குளிர் காய்ச்சல் meaning in tamil,காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்,காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம்,காய்ச்சல் குணமாக முத்திரை,உள் காய்ச்சல் அறிகுறிகள்,குளிர் காய்ச்சல் அறிகுறிகள்,குளிர் காய்ச்சல் in english word,Fever kunamaga,டைபாய்டு காய்ச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும்,குழந்தைக்கு காய்ச்சல் உணவு,குழந்தைக்கு காய்ச்சல் அளவு,காய்ச்சல் தீர மந்திரம்,சளி ஜுரம்,சளி இருமல் குணமாக,நாள்பட்ட சளி இருமல்,சளி மூக்கடைப்பு நீங்க,குழந்தைக்கு தலை சூடு குறைய,காய்ச்சலின் முன் அறிகுறி,காய்ச்சல் குணமாக மந்திரம்,ருமாட்டிக் காய்ச்சல்,மூளை காய்ச்சல் எதனால் வருகிறது,குளிர் நடுக்கம் குறைய,சளி இருமல் காய்ச்சல் குணமாக,காய்ச்சல் குணமாக இயற்கை மருத்துவம்,குளிர் காய்ச்சல் காரணம்,டைபாய்டு காய்ச்சல் குறைய என்ன செய்ய வேண்டும்,குழந்தைக்கு விட்டு விட்டு காய்ச்சல்,காய்ச்சல் வந்தால் என்ன செய்வது,குளிர் காய்ச்சல் in english,குளிர் காய்ச்சல் meaning in tamil,பாட்டி வைத்தியம் குழந்தை

தினமும் 2 சொட்டு இதை மூக்கில் விட்டால் குறட்டை போயே போச்சு!

உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும்.

அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 3 மாதத்தில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது. குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை விடுவதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இப்பொழுது குறட்டை சத்தத்தை குறைத்து குறட்டையில் இருந்து விடுபட இந்த இயற்கை முறையையே பயன்படுத்துங்கள்.

 

தேவையான பொருட்கள்:

1. தும்பை பூ

2. நல்லெண்ணெய் 100 ml

செய்முறை:

1. முதலில் தும்பை பூவை 2 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளவும்.

2. பின் வானலியில் 100 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் தும்பை பூவை போடவும்.

3. ஈரப்பதம் போகும் வரை நன்கு தைல பதத்திற்கு காய்ச்சவும்.

4. பின் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.

5. இதை இரவில் தினமும் மூக்கில் 2 சொட்டு இட்டு வந்தால் மூன்று மாதத்தில் குறட்டைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மூல நோய்க்கு அற்புதமான வீட்டு வைத்தியம்!

0

பல்வேறு உணவு மாற்றங்களால்தான் மூல நோய் வருகின்றது. மூல நோயினால் வரும் வலி வந்தவர்கள்தான் உணர முடியும். உட்கார முடியாமல் ஒரு மாதிரியான உறுத்தல் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதே போல் மலம் கழிக்கும்பொழுது அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும். மலப்பாதை புண்ணாகிவிடும். இந்த மாதிரியான பிரச்சனைகளை தீர்க்கும் வழியாகத்தான் இந்த எளிய முறையை பயன்படுத்த போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. பிரண்டை 500 கிராம்

2. சுக்கு 10 கிராம்

3. மிளகு 10 கிராம்

4. ஓமம் 10 கிராம்

5. பெருங்காயம் 10 கிராம்

6. மஞ்சள் 10 கிராம்

 

செய்முறை:

1. பிரண்டையை முதலில் மோரில் ஊறவைத்து அதை உலர்த்தி 500 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. உலர்த்தி காய்ந்த பிரண்டை உடன்,சுக்கு, மிளகு,ஓமம், பெருங்காயம், மஞ்சள் ஆகியவை சேர்த்து நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

3. இந்த பொடியை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

4. இந்தப் பொடியை தினமும் காலை மாலை இரு வேளையும் உணவுக்குப் பின் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் அனைத்து மூல நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

5. பிரண்டையை உணவாக உண்ண முடியாதவர்கள் சூரணமாக செய்து சாப்பிடலாம்.

6. இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது மூல நோயில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

பான் கார்டில் இத உடனே பண்ணுங்க; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

பான் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் வரி செலுத்துவோர் அனைவரும் பான் கார்டு வைத்திருக்கின்றனர். இந்நிலையில் பான் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பான் கார்டு ஆக்டிவா இல்லை என்றால் அல்லது உங்களிடம் பான் அட்டை இருந்தால் வருமான வரித்துறை தற்போது 10,000 ரூபாய் வரை அபராதம் விதித்து வருகின்றனர். பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா இல்லையா என தெரியாமல் பலரும் உள்ள நிலையில் ஒரு சிலர் தவறுதலாக இரண்டு பான் அட்டை வைத்துள்ளனர்.

அதனால் அவர்களுக்கு அரசால் எச்சரிக்கை விடுத்துள்ளது. பான் கார்டு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு மட்டுமல்லாமல் வங்கி முதலீடு சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கடன் வாங்குதல் போன்ற முக்கியமான நிதி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது,

ஒருவருடைய பான் கார்டு ஆக்டிவாக இல்லாத நிலையில் அதை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில்  பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பான் கார்ட் ஆக்டிவேக உள்ளதா என்பதை வீட்டில் இருந்தே சரி பார்க்க வருமான வரி துறையின் மின்னணு தகவல் வலைதளத்திற்கு செல்ல வேண்டும். கீழே உள்ள குயிக் லைன்ஸ் அல்லது இன்ஸ்டன்ட் இ சர்வீஸ் விரைவில் வெரிபை யுவர் பான் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அதில் பான் கார்டில் உள்ள முழு பெயர், பிறந்த தேதி மற்றும் பான் மற்றும் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால் அந்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி கிடைக்கும். அதை உள்ளிட்ட பிறகு பான் ஆக்டிவாக உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; 4 சதவீதம் ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அவர்கள் கூறி இருப்பதாவது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ் மதுமதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில் அரசு பணிகளில் பதவி உயர்வின் பொழுது மொத்தமுள்ள பணியிடங்களில் நான்கு சதவீதத்திற்கு குறைவில்லாத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். மேலும் அதற்கான உரிய சட்ட திருத்தங்கள், மாற்றுத்திறனுக்கான உரிமைச் சட்டம், 2016 இல் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் பார்வையற்ற மற்றும் குறைந்த பார்வை திறன் உடையவர்கள், செவித்திறன் அற்றவர்கள் மற்றும் குறைந்த அளவு ஒளியை உணரும் திறன் பெற்றவர்கள், சக்கர நாற்காலிகள் உதவியுடன் தினசரி வாழ்வை நகர்த்துவோர், கற்றலில் குறைபாடு, மனம் மனநல பாதிப்பு உடையோரை மாற்றுத்திறனாளிகளாக கருதி பதவி உயர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வு தொடர்பான அம்சங்கள் குறித்து ஆராய்வதற்காக துணை குழுக்களை அமைக்க முன்னதாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த துணைக் குழுவின் மூலம் அறிக்கை அஈசுக்கு அனுப்பப்பட்டு உயர்நிலைக் குழுவின் பரிசோதனைக்காக எடுக்கப்படும். இந்த குழு மனிதவள மேலாண்மை துறைச் செயலரை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் உயர்நிலை குழு பரிந்துரைக்கும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக தவெக மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை? முன்னாள் அமைச்சர் கூறிய சீக்ரெட்

தமிழகத்தில் விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை ஒவ்வொரு கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் யார் யாருடன் கூட்டணி, ஏற்கனவே அமைந்த கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் உள்ளிட்ட தகவல்கள் அன்றாடம் வெளியாகி வருகிறது. இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு இந்த தேர்தலில் அதிகமாகியுள்ளது. இதற்கு காரணம் நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்துள்ளதே.

ஆரம்பத்தில் அவர் தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சு நிலவியது. ஆனால் ஆட்சியில் பங்கு விஜய்க்கு முதல்வர் பதவி உள்ளிட்ட நிபந்தனைகளால் இது பேச்சு வார்த்தைகளுடன் முடிந்தது. இந்நிலையில் பிரிந்திருந்த பாஜக அதிமுக கூட்டணியானது மீண்டும் உருவாகியுள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியலில் கிளம்பியுள்ளது.

தற்போதைய சூழலில் தவெக தனியாக போட்டியிட்டால் தமிழகத்தில் அதிமுக, திமுக, நாதக மற்றும் தவெக என நான்கு முனை போட்டியே உருவாகும். இந்நிலையில் அதிமுக கூட்டணிக்குள் தவெக  வருமா மற்றும் அதன் அரசியல் பாதிப்புகள் என்னவென்று அதிமுக வினா முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Rajendra Balaji TVK VIjay Alliance

அதில் தவெக தனியாக போட்டியிட்டால் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் அக்கட்சிக்கு போகும் எனவும், எதிர்ப்பு ஓட்டுக்கள் மட்டுமல்லாமல் திமுக ஓட்டுக்களே தவெக கட்சிக்கு போகும் என்றும் கூறியுள்ளார். அதே போல அதிமுக மற்றும் மீதுள்ள கட்சியிலிருக்கும் இளைஞர்கள் ஓட்டுக்களும் தவெக கட்சிக்கு போகும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதிகம் பாதிக்கப்பட போவது திமுக தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தவெக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் எங்களுக்கு லாபம் என்றும், அத்தகைய கூட்டணி அமைய வேண்டும் என்றே பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் இது குறித்து தங்களது தலைமைக்கு பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் விஜய் பக்குவமடைந்த தலைவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இதை வைத்து பார்க்கையில் மீண்டும் அதிமுக தவெக கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கும் என்றே கருதப்படுகிறது.

சமஸ்கிருதத்திற்கு மட்டுமே ரூ.2,533 கோடி… தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் ரூ.13 கோடி ஒதுக்கிய மத்திய அரசு – RTI வாயிலாக வெளியான தகவல்!

மத்திய பாஜக அரசு தமிழுக்கும், பிற செம்மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி மற்றும் தமிழுக்கு குறைந்த நிதி வழங்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் RTI (தகவல் அறியும் உரிமை) மூலம் வெளியான தகவல், தற்போது பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

RTI மூலம் வெளியான புள்ளி விவரம்:

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தனது “X” சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, 2014-15 முதல் 2024-25 வரை:

  • சமஸ்கிருத மொழிக்கு மட்டும் மத்திய அரசு செலவிட்டது: ₹2,532.59 கோடி

  • அதே காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 செம்மொழிகளுக்கு சேர்த்து செலவிட்டது: ₹147.56 கோடி

அதாவது:

  • சமஸ்கிருதுக்கு வருடத்திற்கு சராசரியாக ₹230 கோடி

  • 5 செம்மொழிகளுக்கெல்லாம் சேர்ந்தே வருடத்திற்கு ₹13.41 கோடி மட்டுமே!

“தமிழுக்கு வாய்ப்புகள் அல்ல, வெறும் வாக்குகள்!” – சு.வெங்கடேசன்

சமஸ்கிருதம் பேசும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தும், அந்த மொழிக்காக 2,500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதை சுட்டி காட்டிய சு.வெங்கடேசன், கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்:

“தமிழ், தமிழர்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜகவுக்கு வாக்கு மட்டும்! நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கே!”

தமிழ், தெலுங்கு, கன்னடம் – வெறும் சதவீதங்கள் தான்!

புள்ளிவிவரங்களை பொருத்தவரை:

  • உருது: ₹837.94 கோடி

  • ஹிந்தி: ₹426.99 கோடி

  • சிந்தி: ₹53.03 கோடி

  • தமிழ்: ₹113.48 கோடி (GPIL மூலமாக முந்தைய ஆண்டுகளில்)

  • கன்னடம், தெலுங்கு: முறையே 0.5% மற்றும் 0.2% மட்டுமே!

முக்கிய தகவல்:
2004ல் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ், இலக்கிய, வரலாற்று முக்கியத்துவம் கொண்டது என்பதால் அதிக நிதி கிடைக்க வேண்டியிருந்தாலும், மத்திய அரசின் உள்நோக்கங்கள் காரணமாக குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவை பெற்ற மொழிகள்… மறுப்பு!

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி:
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னடம் – மொத்த இந்திய மக்கள்தொகையில் 22% பேர் பேசும் மொழிகள். ஆனால், இவற்றுக்கான மத்திய நிதி பங்களிப்பு, சமஸ்கிருதத்தின் நிழலும் எட்டவில்லை!

“பாஜகவின் சமஸ்கிருத மேலாதிக்க வெறி” – அரசியல் விமர்சனம்

மொழி சார்ந்த மதிப்பீட்டில் தமிழுக்கு மட்டும் அல்லாமல் மற்ற செம்மொழிகளுக்கும் புறக்கணிப்பு நிலை மத்திய அரசின் திட்டமிட்ட அரசியல் நோக்கத்தையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.இந்த விவகாரத்திற்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. வருகிற நாட்களில் இது மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போதை பழக்கமே இல்லையென்ற ஸ்ரீகாந்த்! இறுதியில் சிக்கிய ஆதாரம்

திரையுலகில் பெரும்பாலும் சர்ச்சையிலிருந்து விலகி இருந்து வந்த நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகிலும், ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோஜா கூட்டத்தில் இருந்து… போலீஸ் விசாரணை வரை!

தமிழ் சினிமாவில் “ரோஜா கூட்டம்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த், தனது நீண்டகால கேரியரில் சர்ச்சைகளைத் தவிர்த்து வந்தவர். விஜய்யுடன் “நண்பன்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். ஆனால் தற்போது அவர் மீது போதைப்பொருள் (கொகைன்) பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து, போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகியுடன் தொடர்பு?

போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் விசாரணையின்போது, ஸ்ரீகாந்த், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து கொகைன் வாங்கியதாக போலீசார் கூறுகின்றனர்.

இவர்கள் இருவரும் “தீங்கிரை” என்ற படத்தில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, பிரசாத் தயாரிப்பாளராக இருந்துள்ளார். இதன் மூலம் நெருக்கம் அதிகமாகி, 3 முறை போதைப்பொருள் வாங்கியதாகவும், 4-வது முறையிலும் வாங்க முயன்றதாகவும் ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ பரிசோதனையிலும் உறுதி!

போலீசாரின் சம்மனுக்கு , ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். விசாரணையில், போதைப் பழக்கம் இல்லை என மறுத்து வந்த அவர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து காவலுக்கு எடுத்துச் சென்றனர்.

“தவறு செய்துவிட்டேன்” – ஸ்ரீகாந்தின் ஒப்புதல்

பிரசாத் தன்னிடம் சம்பளமாக ₹10 கோடி பாக்கி வைத்திருந்ததாகவும், அதை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில்தான் போதைப்பொருள் வாங்கியதாகவும் ஸ்ரீகாந்த் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், “தவறு செய்துவிட்டேன்” என ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை எந்த விதமான விமர்சனத்திற்கும் ஆளாகாமல் இருந்த நடிகர் தற்போது போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகியுள்ளது தமிழ் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் தவெகவுடன் திமுக கூட்டணி? 500 கோடிக்கு டீல் பேசிய விவகாரம் லீக் 

ரசிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். ஜனநாயகன் படத்தை முடித்து விட்டு தற்போது முழு நேர அரசியல்வாதியாக விஜய் அரசியலில் இறங்கி விட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக கட்சியையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் விமர்சித்து வருகிறார் விஜய்.

2026 இல் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி எனவும், கூட்டணிக்கான தவெக கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் விஜய்யுடன் கூட்டணிக்கு வரலாம் என தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

ஆனால் விஜய் கடைசி நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணிக்கு சென்று விடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. கடைசி நேரத்தில் விசிக, காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகளும் தவெக கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் அதிமுக கட்சியை சேர்ந்த கே.சி.கருப்பண்ணன் திமுக விஜய்க்கு கொடுத்த ஒரு கூட்டணி ஆஃபர் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். ரூபாய் 500 கோடி தருவதாக சொல்லி விஜய்க்கு திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாகவும், விஜய் அந்த அழைப்பை நிராகரித்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார் கருப்பண்ணன். விஜய் திமுக கூட்டணிக்கு எப்போதும் செல்லமாட்டார் என்றும், ஒரு வேலை விஜய் திமுகவின் கூட்டணிக்கு சென்றுவிட்டால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் பேட்டி கொடுத்துள்ளார் கே.சி.கருப்பண்ணன்.

ரஜினிக்கும் தனுசுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்! நாகர்ஜுனா ஓபன் டாக்!

தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வளம் வருபவர் நாகர்ஜுனா. இவர் தற்போது நடிகர் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல தனுசுடன் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். குபேரா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் நாகர்ஜுனா மற்றும் தனுஷின் நடிப்பை எல்லோரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

அண்மையில் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும்போதும், படப்பிடிப்பு தளத்திலும் எப்படி நடந்து கொள்வார்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். தனுஷ் மற்றும் ரஜினி எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் அந்த கதாப்பாத்திரமாவே மாறிடுவாங்க. தனுஷ் கொஞ்சம் வித்தியாசமானவர். படப்பிடிப்பு தளத்தில் யாரிடமும் பேச மாட்டார். யாராவது அவரிடம் சென்று பேசினால் பேசுவார். மற்ற எல்லா நேரங்களிலும் அந்த கதாப்பாத்திரமாகவே தனுஷ் மாறிவிடுவார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்சன் காட்சிகளில் நடிக்கும்போது யாரிடமும் பேசமாட்டார். மற்ற எல்லா நேரங்களிலும் எல்லோரிடமும் சகஜமாக பேசுவார். இவங்க ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சாங்க. ஏன்னா நான் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் எல்லாரிடமும் சகஜமாக ஜாலியா பேசிக்கிட்டே இருப்பேன் என பேட்டி கொடுத்துள்ளார் நாகார்ஜூனா.