Sunday, July 6, 2025
Home Blog Page 13

அதிமுக பாஜகவுடன் மதிமுக கூட்டணி?  விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த வைகோ!

மறுமலர்ச்சி முன்னேற்றக்கழகம் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. அண்மையில் வைகோவின் மகன் துரை வைகோ எங்களுக்கு இந்த முறை 12 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் எனவும், இது பற்றி திமுகவுடன் பேசுவோம் எனவும், நிறைய தொகுதிகள் கொடுத்தால் எங்கள் பலத்தை காட்டுவோம் எனவும் பேட்டி கொடுத்தார்.

அதேபோல பாஜக கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் உள்ள ஒரு முக்கியமான கட்சியுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக அண்மையில் பேட்டி கொடுத்தார். அந்த கட்சி மதிமுக தான் எனவும், வைகோ பாஜக அதிமுக கூட்டணிக்கு செல்வது உறுதி எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வதந்தி அனைத்திற்கும் வைகோ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திராவிட இயக்கத்தை காப்பதற்காக 2017ஆம் ஆண்டு திமுகவுடன் கைகோர்த்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் மதிமுக கட்சிக்கு இல்லை. ரகசியமாக கூட்டணி பற்றி பேசும் பழக்கமும் எங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை எனவும் பேட்டி கொடுத்துள்ளார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ.

ஜனநாயகன் தான் விஜய்யின் கடைசி படமா? தளபதி ரசிகர்களுக்கு நடிகை சொன்ன ஹேப்பி நியூஸ் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தமிழ் நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இந்த ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார்.

2024 ஆம் ஆண்டு விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். ஜனநாயகன் படம் தான் தான் நடிக்கும் கடைசி படம் என்றும் இந்த படத்திற்கு பிறகு விஜய் வேறு எந்த படத்திலும் நடிக்கமாட்டார் எனவும், முழு நேர அரசியலில் இறங்கப்போகிறார் எனவும் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள மமிதா பைஜூ விஜய்யின் சினிமா பயணம் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். ஜனநாயகன் தான் உங்களின் கடைசி படமா என மமிதா பைஜூ விஜய்யிடம் கேட்டுள்ளார். அதைப்பற்றி இப்போ எனக்கு தெரியல, தேர்தல் முடிவுகளை பொறுத்து தான் எல்லாம் தெரியும் என்று விஜய் சொல்லி இருக்கிறார்.

ஜனநாயகன் படத்தின் கடைசி நாள் சூட்டிங்கின் போது எல்லோரும் எமோஷனலாகி விட்டோம். விஜய் சாரும் எமோஷனலாகி விட்டார் என மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் திருமண நாளை புறக்கணித்த அன்புமணி ராமதாஸ்! தொண்டர்களுக்கு ஏமாற்றம் 

பாமக உட்கட்சி பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்படாமல் நாளுக்கு நாள் பிரச்சனையானது வளர்ந்து கொண்டே செல்கிறது. அப்பா மகனுக்குமிடையேயான இந்த பிரச்சனையில் கட்சியே இரண்டு அணிகளாக பிரிந்து ஆதரவு எதிர்ப்பு என செயல்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாட்டில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. இதற்கு காரணமாக அமைந்த இளைஞர் அணி தலைவர் பதவி நியமனத்தில் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் மருத்துவர் ராமதாஸ் எடுத்த முடிவில் தலையிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்குமரன், பின்னர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மகள் வழி பேரனான முகுந்தன் நியமிக்கப்பட்ட போதும் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.

மேலும் மேடையிலிருந்த அவர் கையிலிருந்த மைக்கை வீசி தான் தனி அலுவலகம் திறந்துள்ளதாகவும், தன்னை சந்திப்பவர்கள் அங்கு வந்து சந்திக்கலாம் எனவும் பொது வெளியில் அறிவித்தார். இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் பேச்சுக்கு எதிர்ப்பு கிளப்பியதை கேட்டு சுதாரித்து கொண்ட அவர் தலைவர் பொறுப்பில் இனிமேல் தானே செயல்படுவதாக அறிவித்தார். அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு செயல் தலைவர் பதவியை அளித்தார். ஆனால் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் இந்த அறிவிப்பை ஏற்காமல் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் அவர்களுக்கு எதிராக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இந்த சூழலில் குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாற்று கட்சி தலைவர்கள் என பலரும் சமாதானம் செய்ய முயற்சித்தும் மருத்துவர் ராமதாஸ் இந்த விவகாரத்தில் சமாதானம் ஆகவில்லை என்றே கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தனக்கு கட்டுப்படாத கட்சியின் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் என பழைய நிர்வாகிகளை மாற்றி தனக்கு ஆதரவான புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். அந்த வகையில் நாளை மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் திருமண நாளான இன்று அன்புமணி ராமதாஸ் பெற்றோரிடம் ஆசி வாங்க வருவார். அதனால் இப்பிரச்சனையில் ஒரு சுமூக தீர்வு ஏற்படும் என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தற்போது வரை அன்புமணி ராமதாஸ் பெற்றோரை சந்திக்க வரவில்லை எனவும், திருமண நாளுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

2026 தேர்தல் கருத்து கணிப்பு; வெற்றி கனியை பறிக்கும் கட்சி எது தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த முறை யார் ஆட்சியை பிடிப்பார்கள் என பல்வேறு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் சட்டம் ஒழுங்கு சரியில்லை அன்றாடம் கொலைகள், கொள்ளைக்கார சம்பவங்கள், காவல் நிலையம் மீதான தாக்குதல் ஜாதி மோதல்களை அனைத்தும் தினந்தோறும் நடைபெற்று வருகின்றது.

அதனால் வரும் 2026 ஆம் தேர்தலில் திமுக ஆட்சியை விரட்டுவோம் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கேட்கும் பொழுது திமுக ஆட்சியை மீண்டும் தொடரும் என கூறி வருகின்றனர்.

மேலும் தற்போது அதிமுக மற்றும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது வழக்கம் போல புரட்சி பாரதம் உள்ளது. அதனால் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிக ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படாத அதிருப்தியில் இருப்பதினால் தனது நிலைபாட்டை பிறகு சொல்வதாக அறிவித்திருக்கின்றனர் என யோசனை செய்து வருகின்றனர்.

பாஜகவில், அமுமுக, ஏசி சண்முகம் கட்சி, ஜி கே வாசனின் தாமாக, ஓபிஎஸ்-யின் அதிமுக மீட்பு குழு இடம் பெற்றுள்ளன நிலையில் பாமக பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டுமென அன்புமணி விரும்புகிறார், ஆனால் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என மறுப்பு தெரிவித்து வருகின்றார் கூறி வருகின்றார் ,

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கூட்டணிகள் தெரியவரும் என கூறப்படுகின்றது. இத்தனை கட்சிகள் உள்ள நிலையில் தற்போது நடிகர் விஜய் அண்மையில் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலை நோக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால் அவர் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகின்றது. அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட போட்டி கட்சிகள் உள்ள நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் வெற்றியடையுமா எனவும் எதிர்பார்ப்பும். மக்களிடையே அதிகரித்துள்ளது.

இருப்பினும் விஜய் தற்போது வரை ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை அவருக்கு எப்படி 60 சதவீதம் ஓட்டு கிடைக்கும் என மக்கள் மத்தியில் கூறப்படுகின்றது. என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அவர் களத்தில் இறங்கி பெரிய கட்சிகளுடன் போட்டியிட்டு எத்தனை இடங்களை வெல்லப் போகிறார் எனவும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிஎம் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்!

மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் தள்ளுபடிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் பயனடையும் வகையில் பிரதான் மந்திரி சம்மன் கிசான் நிதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தில் தற்போது வரை 19 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இருபதாவது தவணை ஜூன் 25ஆம் தேதி இறுதியில் வழங்கப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரதான் மந்திரி சம்மன் கிசான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் 20 தவணையை ஒரு சிலரால் மட்டுமே பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

தற்போது வரை 19 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் இருபதாவது தவணை எப்போது வரும் என விவசாயிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த eKYC செய்த நபர்களுக்கு இருபதாவது தவணை பணம் 2000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிஎம் சம்மன் கிசான் யோஜனா திட்டத்தில்   eKYC சரி பார்ப்பதற்கு https://pmkisan.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு அங்கு eKYC விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும் ஆதார் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்

இதற்குப் பிறகு மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதனை உள்ளீடு செய்து பார்த்துக் கொள்ளலாம் இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக eKYC சரி பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு சரிபார்க்க முடியவில்லை என்றால் இருபதாவது தவணை பணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது

வெற்றிகரமாக நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு; 6 முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

இந்து முன்னணி சார்பாக மதுரை வண்டியூரில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெறும் என அறிவிப்பு வெளியானதில் இருந்தே திமுக கூட்டணி கட்சிகள் இடையே அதிக அளவு விமர்சனங்கள் எழுந்தது.

ஆனால் அந்த விமர்சனங்களையும் தாண்டி வெற்றிகரமாக இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் மற்றும் தமிழக பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன், மத்திய இணை செயலாளர் எல் முருகன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஆறு முக்கிய தீர்மானங்களை இந்து முன்னணி நிர்வாகிகள் நிறைவேற்றியுள்ளனர்.

அதில் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், பல்ஹாம் தாக்குதல் பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு, குன்றம் குமரனுக்கு சொந்தம் என முருகன் மலைகளைக் காக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும், தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும், சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகள் மாதிரி கோவில்கள் அமைக்கப்பட்டது.

இந்த கோவில்களில் அந்தந்த கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் காலை மற்றும் மாலை என இரண்டு நேரமும் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

முருகனின் ஆறுபடைவீடு, மாதிரி கோயில்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்தபட்ட கலை நிகழ்ச்சியில் குழந்தைகள் முருகன் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.

இப்போது ரூ.1 கோடி வைத்தால்… 20 வருடங்களில் வெறும் ரூ.25 லட்சம் தான் மதிப்பு!

உயர்ந்து வரும் விலை ஏற்றம் உங்கள் செல்வத்தை எவ்வாறு ‘மௌனமாக’ அழிக்கிறது? என பார்ப்போம்.

விலை ஏற்றம் (Inflation) என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் காலப்போக்கில் மெதுவாக உயர்வதை குறிக்கும். பங்குச் சந்தை வீழ்ச்சி, வரிவிதிப்புகள், மோசமான முதலீடு உள்ளிட்டவை ஆபத்தானது. ஆனால் மிக ஆபத்தானது மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படாதது உயர்ந்து வரும் விலை ஏற்றம்.

மௌன செல்வக் கொலைகாரி!

முதலில் தோன்றும் 5%-7% விலை ஏற்றம் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் விளைவுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடியது.

இப்போது ரூ.1 கோடி வைத்தால், 20 வருடங்களுக்கு பிறகு அதன் மதிப்பு ரூ.25.84 லட்சம் மட்டுமே அதன் மதிப்பாக இருக்கும்.

ஆனால் உங்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய்கூட இழக்காமல் கிட்டதட்ட 74 சதவீத மதிப்பு குறைந்து போகும் அபாயம் உள்ளது.

ஏன் இது முக்கியம்?

இன்று உங்கள் ஓய்வுத்தொகை ரூ.1 கோடியாக இருக்க வேண்டும் என நினைத்தால்,
20 வருடங்களுக்கு பிறகு அதே அளவுக்கான மதிப்பை பெற நீங்கள் ரூ.4 கோடி சேமிக்க வேண்டி வரும்!

தடுக்கும் வழி என்ன?

இடையிலான முதலீடுகள், குறிப்பாக ஈக்விட்டி சார்ந்த முதலீடுகள், தான் விலை ஏற்றத்தைக் கடந்துவிட்டு உண்மையான வளர்ச்சியை வழங்கக்கூடியவை.

எப்.டி., சேமிப்பு கணக்குகள் போன்ற பாதுகாப்பான ஆனால் குறைந்த லாபம் தரும் கருவிகள் விலை ஏற்றத்தால் தண்டிக்கப்படுகின்றன.

மீள்பார்வை செய்யும் முதலீட்டுகள் மட்டுமே உங்கள் செல்வ வலிமையை பாதுகாக்கும்.

விலை ஏற்றம் என்பது நமது பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு அமைதியான திருடன். தலைப்பு செய்திகளில் வராது, ஆனால் உங்கள் வருங்காலத்தை கையாண்டு விடும்.
இன்று ரூ.1 கோடி வைத்திருப்பது போதுமானது இல்லை — அதைப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் திட்டமிடுங்கள்.

உங்களிடமிருந்து கையெழுத்து வாங்காமல் விலை ஏற்றம் உண்மையில் உங்கள் பணத்தைக் களவாடுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; பெண்களே இத கவனிச்சுக்கோங்க!

திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்த நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகுதி வாய்ந்த ஒரு சில மகளிர்களுக்கு தொகை கிடைக்கவில்லை என கூறப்படும் நிலையில் மீண்டும் மகளிருக்கு வாய்ப்பளிக்க திமுக அரசு முடிவு செய்தது.

மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும், குடும்பத்தில் அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் யாரும் இருக்கக்கூடாது. எம்எல்ஏ, எம்பி, கவுன்சிலர் மற்றும் மேயர், ஊராட்சி மன்ற தலைவர் போன்ற மக்களால் தேர்வு செய்யப்பட்ட பதவிகளில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில் செய்து தொழில் வரி கட்டுபவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நன்செய், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இந்த தொகையை பெற முடியாது..

கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது அதனால் தகுதியான மகளிர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தகுதியான நபர்கள் சரியான மொபைல் எண், வங்கி கணக்கு எண் கொடுக்க வேண்டும்.

ஜூலை 15ஆம் தேதி முதல் நடக்கும் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டு நகல்; தமிழக அரசு சொன்ன அப்டேட்!

இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக இருக்கின்றது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டு இருந்தால் தான் நாம் ஒரு இடத்தில் வசிக்கிறோம் என்பதை உறுதியாக கூற முடியும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே பெற முடியும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது மகளிர் உரிமைக்காக திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் தான் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்டதும் அவர்களுக்கு நகல் வழங்கும் திட்டம் முன்னதாகவே தமிழகத்தில் அமலில் இருக்கும் நிலையில் இதுவரை 10 லட்சம் நகல் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. புதிய நகல் கார்டு வேண்டும் என விரும்புவோர் www.tnpds.gov.in என்ஜாய் இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் நகல் அட்டைகள் தபாலுக்கு பணம் செலுத்தினால் வீட்டுக்கே தபாலில் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டையின் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பொற்கால் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தற்போது கண் கருவிழி பதிவு மற்றும் கைரேகை பதிவின் மூலம் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றது.

முன்பிருந்தது போல மாநிலம் மற்றும் மத்திய அரசு வழங்கும் பொருட்களுக்கு இரண்டு முறைகள் கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒருமுறை கைரேகை பதிவு செய்தால் போதும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு மாற்றங்கள் ரேஷன் அட்டையில் செய்யப்பட்டு வரும் நிலையில் புதிய ரேஷன் அட்டை நகல் பெற விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்

திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா! தாக்குதலுக்கு பயன்படுத்திய அதிபயங்கர ஆயுதங்கள்  

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் புதிய ஆயுத தாண்டவத்தின் ஆரம்பமாக, 22 ஜூன் 2025 அன்று அமெரிக்கா நேரடியாக ஈரான் மீது குண்டு மழையை துவக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் மூன்று முக்கிய அணு ஆய்வுக்கூடங்கள் — நடான்ஸ், ஃபோர்டோ, இச்பஹான் — மீது வெடி குண்டுகள் விழுந்து அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அந்த வகையில் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதி பயங்கரமான ஆயுதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்கர்‑பஸ்டர் குண்டு – GBU‑57 MOP

  • பயன்பாடு: உலகளாவிய ரீதியில் மட்டுமே அமெரிக்கா பயன்படுத்தும் GBU‑57 Massive Ordnance Penetrator (MOP) — “பங்கர்‑பஸ்டர்” குண்டு.

  • அளவுகள்: சுமார் 13,600 கிலோ (30,000 பவுண்டு), நீளம் 20.5 அடி, மிகப் பெரிய “non-nuclear” குண்டாகும்.

  • திறன்: தரையில் விழுந்தவுடன் 200 அடி வரை சென்று அதி‑ஆழமாக வெடிக்கும்; செங்குத்தாகக் கணிசமான பாதாள அமைப்புகளை உடைப்பதற்கு வடிவமைக்கப்பட்டது .

  • ஏவப்படுதல்: B‑2 Spirit ஸ்டீல்த் விமானங்கள் பயன்படுத்திய போட்டுரியும், முன்னர் சோதனை மட்டுமே… இப்பொழுது நடைமுறை தாக்குதலில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகள்

அமெரிக்கா இன்னொரு நடவடிக்கையாக 30 Tomahawk க்ரூஸ் ஏவுகணைகள் – கடல்மூழ்கி கப்பல்களில் இருந்து நீர்மூழ்கிய நிலையில் ஏவப்பட்டு, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களின் யுரேனியம் செறிவூட்டும் மையங்களை அழித்தது .

  • பயன்முறை: கடலின் மேல் அல்லது கீழிருந்து பறந்து இலக்கை அடையும் வகையில்; உள்கட்டமைப்புகளைத் துல்லியமாக குண்டு செய்வது.

  • சிறப்புகள்: வெடிமருந்து 450 கிலோ, விலை சுமார் 2 மில்லியன் USD .

  • GPS கருவியின் துணையுடன் செயல்படுவதால் இதன் மூலமாக துல்லியமான தாக்குதலை நடத்த முடியும்.

தாக்குதலின் பின்னணி மற்றும் விளைவுகள்

  • தண்டனை வகை: அமெரிக்க அதிபர் “இரு வார காலத்தில் பேச்சுவார்த்தை அல்லது தாக்குதல்” என்ற எச்சரிக்கையை முன்னரே கூறி இருந்தார் .

  • மத்திய கிழக்கு பரபரப்பு: இஸ்ரேல் – ஈரான் மத்தியில் 9 நாட்கள் தொடர்ந்த தாக்குதல் தொடர்ச்சிக் கொண்டது; இந்நிலையில் போரில் 10 வது நாளான இன்று அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.